Nali
Tuesday, August 30, 2011
tittle is urs
கடவுளை(அன்பை ) நம்புகிறவன் நல்ல நண்பனை பெறுகிறான் ...
கடவுளை எதிர்ப்பவன் ஒரு கொடூரமணம் கொண்ட எதிரியை அடைகிறான்...
எனக்கு நீ கிடைத்து விட்டாய் ... நான் உன்னில் கடவுளை உணர்கிறேன் .
tittle is urs
என்ன தான் நாம் சுதந்திர நாட்டில் வசித்தாலும்...
ஒரு வயதை கடந்ததும் அடிமைகள் ஆகி விடுகின்றோம்
கணவனிடமோ / மனைவியிடமோ
ஏன் இந்த அவல நிலை
figure kidaikalanaalum kavalai ...
kidaichalum kavalai ...
Monday, August 29, 2011
tittle is urs
எத்தனையோ மந்திர சொற்கள் பூமியில் இருக்க ...
எப்பொதும் என்னை காப்பாற்றும் ஒரே மந்திர சொல்லாக
நான் நினைப்பது (நட்பை) மட்டுமே ...
tittle is urs
என்ன தான் மாற்றம் வரவேண்டும் என்று
நாம் நினைத்தாலும்..
ஒரு நாளும் நாம் மாறுவதில்லை
நம்மை மாற்ற நினைப்பவரை அருகில் சேர்ப்பதும் இல்லை
இது தான் உண்மை ....
Saturday, August 27, 2011
tittle is urs
nali's todays தத்துவம் ,
sight அடிக்க பொண்ணு தேவையில்லை
நமக்கு கண்ணு இருந்தா போதும் ...
உயிர் வாழ பூமி மண்ணு தேவையில்லை
backery bun போதும்
ஹஹஹா
Friday, August 26, 2011
tittle is urs
என்ன தான் நீ இரும்பினால் ஆகிய உடையை போட்டு மூடிகொண்டாலும்..
உன்னை விரும்பும் உண்மையான கண்களால் உன் மனதை காணமுடியும் ..
மனதுக்கு சிறை போட நாம் யார் ...
Thursday, August 25, 2011
tittle is urs
உண்ணவும் நேரம் இல்லை ..
உறங்கவும் நேரம் இல்லை..
இருந்தும் பசி ஆரிக்கொள்கிறது உடல்
என்னவள் உன்னை நினைத்ததும் :-)
உன் நினைவு என்னும் இறகு என் இமைகளை தடவி
என் விழிகளின் வலியையும் நீக்கியது
Wednesday, August 24, 2011
tittle is urs
கண்ணை மூடி தேடிகொண்டிருகிறாய் நான் எங்கே என்று..
ஒரு பொழுதும் உனக்கு தோன்ற வில்லையா...
நீ தான் நான் என்று
Tuesday, August 23, 2011
tittle is urs
நாம் முழு இதயத்தை இழக்காமல் ஒரு இதயத்தின் பாசத்தை முழுவதும் பெரமுடிவது இல்லை
அப்படி கிடைத்த உன்னை பார்த்து அது பொறமை படுவதும் இல்லை
ஆனால் எப்போது பிறர் உன்னை தன்னிடம் இருந்து பிரித்து செல்வதாக அது உணர்கிறதோ அன்று அவர்களை பகைக்கவும் தயங்குவதில்லை
Monday, August 22, 2011
tittle is urs
நாம் நேசித்தவரின் உடல் நம்மை வெறுக்கலாம் ..
ஆனால்
நம்மால் நேசிக்கபடவரின் மனம் ஒரு போதும் நம்மை வெறுப்பதும் இல்லை
நம்மை விட்டு விலகுவதும் இல்லை
Saturday, August 20, 2011
tittle is urs
உன்னை நான் தண்ணீர் விட்டும் வளர்க்கவில்லை ...(செடி)
என் கண்களில் கண்ணீர் விட்டும் வளர்க்கவில்லை(காதல்)
இருத்தும்
நீ வளர்ந்தாய் என் மனதில் ...
பாசம் மட்டுமே விட்டதால் (நட்பு)..
tittle is urs
எல்லோரை பார்த்ததும் வெட்கப்பட்டால் வெட்கத்துக்கு மதிப்பில்லை
பிடித்தவரை பார்த்து வெட்க்கபட்டால் அந்த வெட்கத்துக்கு அளவில்லை ..
feel it
Friday, August 19, 2011
tittle is urs
முதல் காதலின் வலியை அனுபவித்தவன்
என்றுமே ..
அடுத்து தன்னை நேசிக்கும் உண்மையான மனதை அதிகம் நேசிக்க விடமாட்டான் ...
ஏமாற்றத்தின் வலி தன்னை நேசிப்பவரை தாக்கக்கூடாது என்பதால் மட்டுமே
Wednesday, August 17, 2011
tittle is urs
நானும் அடிமை தான் ..
என்னை நேசித்த உன் மனதின் முன்பு ... மட்டும்
Saturday, August 13, 2011
tittle is urs
சூரியன் மேல் நெருப்பை விட்டு எரிக்க முடிந்தவர் யாரும் அல்ல ..
நிலவை நீர் விட்டு குளிர்விப்பவனும் எவனும் அல்ல;
உன் கோவம் என்னும் சூரியன் என்னை பிறரிடம் இருந்து காக்கிறது..
உன் அன்பு என்னும் நிலவு என்னை சாந்தமாய் வைத்துக்கொண்டிருகிறது ..
எப்பொதும் அதனால் தான் யாரும் தொடமுடியாத வானமாய் நான் அங்கு
நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கிறேன் .
Thursday, August 11, 2011
tittle is urs
எத்தனை வேதியல் மாற்றம் உடலில் ஏற்பட்டாலும் ...
நண்பனை பார்க்கும் போது அவன் கண்களில் நட்பு தான் ஓங்கி நிற்கும் ..
இதயத்தில் உருக்கொண்ட நட்பு உடலாலும் சாய்க்க படுவதில்லை
உடலில் ஏற்படும் மாற்றத்தாலும் சிதைக்க படுவதில்லை..
இது தான் நட்பின் பெருமை .
Wednesday, August 10, 2011
tittle is urs
எத்தனை துன்பங்கள் என்னை தொடர்ந்தும் தாங்கி கொண்ட எனக்கு ..
உன் பின்னே சிறு எறும்பு தொடர்ந்து வந்ததை தாங்கி கொள்ள முடியவில்லையே ...
Tuesday, August 9, 2011
tittle is urs
என் கண்கள் கலங்கும் போது கவிதையும் வருகிறது..
கண்ணீர்த்துளிகளில் வேகத்தை மிஞ்சுவதாய் ..
அந்த நிமிடத்தில் என் விரல்கள் கண்ணீரை துடைபதற்கு முன்பே ...
நீர் வற்றி போகிறது கண்களில்
கண்ணீரும் பயந்துவிடுகிறதோ என் கவிதையை கேட்டு
Saturday, August 6, 2011
tittle is urs
நாளுக்கு
நாள்
நாட்கள்
நகர்ந்துகொண்டிருந்தாலும்
நகராமல்
நம்மோடு
நகைத்து கொண்டிருக்கும் ..
நட்புக்கு
நன்றி சொல்வோம் ..
நட்புடன்
நான்
நளினி.
Monday, August 1, 2011
tittle is urs
இலக்கணப்பிழை யோடு எழுதினாலும்
நட்புக்கு கற்பு மாறுவதில்லை ...
நம் நட்பை போல
‹
›
Home
View web version