Nali
Monday, October 31, 2011
tittle is urs
வெட்ட வெட்ட வளரும் நகம் ...
நீ ஒருமுறை வெட்டி விட்டாய் நகத்தை அல்ல என் மனதை
இன்னும் எனக்கு ஆறவில்லை அந்த ரணம்
Friday, October 28, 2011
tittle is urs
நான் உன்னிடம் பேச வாய் திறக்கும் முன்னரே ,
என் மனம் பேச தொடங்கி விட்டது உன்னுடன் .
எனக்கு போட்டி வேறு யாரும் அல்ல
இங்கு எனது மனதை தவிர!
Thursday, October 27, 2011
tittle is urs
உன் மூச்சுக் காற்றுக் கூட என் மீது பட்டதில்லை..
பின்பு எப்படி நீ என்னுள் வந்தாய் ...
Tuesday, October 25, 2011
tittle is urs
சிரிக்கதெரிந்தவனுக்கு சிறகுகள் தேவை இல்லை
Monday, October 24, 2011
tittle is urs
ஒருவரையும் கட்டாயப்படுத்தாதே
முடிந்தால் உன் அன்பினால் அவர்களை கட்டுப்படுத்து ...
Saturday, October 22, 2011
tittle is urs
எத்தனை பேர் உன்னை தொட்டாலும் இன்றும்
களங்கம் இல்லாமல் நீ இருப்பது எப்படி = "வெற்றி"
tittle is urs
வானில் பறக்க இல்லை எனக்கு சிறகு ...
பேசி பழக நீ இருக்கும் போது
உன் விரல்களே எனக்கு ஆகிறது இறகு
மழை மேகம் கண்டால் ஆடிடுதே மயில்..
நீ பேசிய போது உணர்தேன் நீ ஒரு மஞ்சள் நிற குயில் ...
Friday, October 21, 2011
tittle is urs
கவிதையை படைபவரின் அறிவு திறனை விட
கவிதையை படிப்பவரின் அறிவுத்திறனே
அந்த கவிதைக்கு உண்மையான மதிப்பை(அர்த்தத்தை) கொடுக்கும் ...
Thursday, October 20, 2011
tittle is urs
பார்த்த பார்வையிலே என்னை கத்தரித்து சென்ற
நீ ஒரு வெட்டுகிளியோ!!!
Wednesday, October 19, 2011
tittle is urs
என்னிடம் இருக்கும் உன் நினைவுகளை
திரும்பி தர சொல்லி கேட்க்க நீ தயங்க வில்லை ...
என் ஆன்மாவிடம் போய் உன் நினைவுகளை
அழிக்கும் படி சொல்ல எனக்கு தைரியம் இல்லை...
Tuesday, October 18, 2011
tittle is urs
சத்தம் இல்லாமல் அழ நினைத்தேன் அதன் விளைவு
இன்று என்னை சுற்றி எல்லோரும் அழுகின்றனர் சத்தமாக
tittle is urs
மனசு ஓடியும் போது சத்தம் கேட்பதில்லை....
ஆனால் இதயம் ஓடியும் போது அதில் ஓடும் ரத்தம் கேட்கும்
உன்னால் தானே இது எல்லாம் என்று இதயத்திடம் (யோசிக்காமல் நேசித்ததால் தானே இப்படி என்று ) ...
tittle is urs
பாசத்துக்கு அடிமையானவர்களே
சோகத்தால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர்
சொல்ல முடியாத வேதனைகளிலும்
அவர்கள் பாசத்தை எதிர்ப்பதில்லை..
சோகத்தை வெறுப்பதில்லை ,..
Monday, October 17, 2011
tittle is urs
என்னோடு நீ இல்லை..
அதனால் தான் எனக்கு இங்கு தொல்லை..
இதற்குதான் ராமரும் ஓடிச்சார் வில்லை..
நான் இனி இந்த விளையாட்டுக்கு வரலை.
Sunday, October 16, 2011
tittle is urs
நீ அழும் போது உன் கண்ணீரை துடைத்து விடும்
எந்த உண்மையான நண்பணும்...
நீ சிரிக்கும் நேரத்தில் அருகில் இருக்க நினைப்பதில்லை
Friday, October 14, 2011
tittle is urs
மரணம் கூட என்னை அடிக்கடி நெருங்கி பார்க்க ஆசை கொள்கிறது ...
உன்னால் ஏன் முடியவில்லை ...
tittle is urs
நீ என்னிடம் எதையுமே விரும்பி கேட்டதில்லை...
என் மௌனத்தை தவிர ...
என் மௌனம் என்னை கொன்றே விடும் என்று தெரியாமல்
Thursday, October 13, 2011
tittle is urs
ஆசை பட்டது ஏதும் இன்னும் என் கை சேரவில்லை ..
என்னிடம் உள்ள எதன் மீதும் நான் ஆசை படவில்லை..
இருந்தும் பத்திரமாக வைத்து இருக்கிறேன் அவற்றை
அதை நேசித்த யாரோ அவற்றை தேடிவரும் போது
பத்திரமாக அவர்களிடம் கொடுப்பதற்காக !
Wednesday, October 12, 2011
tittle is urs
நான் நேசித்த எதுவும் என் அருகில் இன்று இல்லை ...
நல்ல வேலையாக இன்னும் நான் என்னை நேசிக்க தொடங்கவில்லை ..
எல்லாம் நன்மைகே என்பது இதற்குத்தானா
Tuesday, October 11, 2011
tittle is urs
உன் அன்பில் கலந்து இருக்க ஆசை பட்டேன் ..
நீயோ என்னை காற்றில் கலந்து இருக்கும் படி செய்து விட்டாய் ...
எரிந்து கொண்டிருக்கும் உடலில் இருந்து வந்த குரல் ..
யாருடையதோ பாவம்
Monday, October 10, 2011
tittle is urs
என் கண்களால் நேரடியாக பார்க்க முடியாத விஷயமாக நான் நினைத்தது ஒன்று தான்
அது என் இதயம்
இப்பொது உணர்ந்தேன்
இரண்டு
அதில் நான் செதுக்கிய உன் உருவம்
Sunday, October 9, 2011
tittle is urs
உனக்கு நன்றிகள் சொல்ல என்னிடம் உள்ள வார்த்தைகள் போதாது ..
அதனால் என் நட்பையே பரிசாக கொடுக்கிறேன் உன் இதயத்துக்கு
Saturday, October 8, 2011
tittle is urs
எத்தனை காலம் தவம் கிடந்தேனோ உன்னை பெறுவதற்கு
இன்னும் எத்தனை காலம் வரம் கிடக்க வேண்டுமோ நீ இங்கு வருவதற்கு
Friday, October 7, 2011
tittle is urs
உன் கண்களில் நான் என்னை பார்க்கும் போது
எனக்கு வலிக்கவில்லை
ஆனால்
உன் கண்ணீர் துளிகளிலும் என்னை பார்த்த போது
அந்த நிமிடம் எனக்கு மட்டும் அல்ல என் இதயத்துக்கும் வலித்தது
Thursday, October 6, 2011
tittle is urs
துடி துடிக்கும் என் இதயத்தில்
பட படக்கும் உன் நினைவுகள்
சல சலக்கும் என் கொலுசுகளை ரசிக்கும்..
சிலு சிலுக்கும் உன் பார்வை அசைவுகள்
Wednesday, October 5, 2011
tittle is urs
நீ பேசிய வார்த்தைகள் நூறு ..
பேசாத மௌனத்தையும் என்னிடம் கூறு ..
மணல் மேல் ஓடும் ஆறு ...
என் உயிர் நீ தான் திரும்பி பாரு .
Tuesday, October 4, 2011
tittle is urs
என் கண்களால் ஈர்த்துக்கொண்டு கனவுகளை
சேர்த்துவைக்கிறேன் இதயத்தில் உன் நினைவுகளை
Monday, October 3, 2011
tittle is urs
படித்த வரிகளை மறக்க முடியும்
பிடித்தவர் சொன்ன வார்த்தைகளை மறக்க முடியுமா
கசந்த காயை வெறுக்க முடியும்
சுவைத்த கனியை வெறுக்க முடியுமா
Saturday, October 1, 2011
tittle is urs
நான் கண் திறந்தும் கனவுகள் காண்கிறேன்
அதிலும் நீ தான் ...
tittle is urs
உன் மனதை திறந்து யாரிடம் உண்மையாக உன்னால் பேசமுடிகிறதோ
அவர்கள் தான் நீ கண்ணாடியின் முன் பார்க்கும் உன் பிம்பம் போன்றவர்கள்
அவர்கள் மட்டுமே நீ அழ நினைத்தும் தங்களது கண்களில் கண்ணீரை அணிந்து நிற்பர்
tittle is urs
வெட்கப்படும் போதெல்லாம் கேள்விகளை கேட்கிறாய் என்னை
என் இதழ்கள் பதில்கள் சொல்ல மறுப்பதில்லை
ஆனால் என்னில் ஏற்பட்ட வெட்கம் தடுக்கிறது பதிலை
tittle is urs
என் கண்கள் உன்னை பார்க்கவேண்டும் என்று இமைக்கிறது ,,
என் இதயம் உன்னை பார்த்தல் யாரேனும் பிரித்துவிடுவார்களோ என்று துடிக்கிறது ..
இதில் எதை செய்வது என்று தெரியாமல் நான் தவிக்கிறேன் அமைதியாக
tittle is urs
உன் விழிகளினாலே உண்கிறாய் என்னை ..
இருந்தும் முழுவதுமாய் நான் இங்கே ...
tittle is urs
சிரிப்பதற்காக கடவுள் உனக்கு கொடுத்த நேரத்தை
அழுவதற்காக பயன் படுத்தாதே
பணம் கொடுத்து விலைக்கு வாங்க நீ ஒன்றும் சிலை அல்ல
என் இதயக் கடலில் அடித்துக்கொண்டிருக்கும் அலை
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)