Tuesday, January 31, 2012

tittle is urs

உன் ஆசை : 
பேசுவது நீ யாக இருந்தால் 
அங்கு ரசிப்பது நானாக இருக்க வேண்டும
ரசிப்பது நீ யாக இருந்தால் 
நிச்சயம் என் அருகில் என் தோழி பேசிக்கொண்டிருக்க வேண்டும் ..

Saturday, January 28, 2012

tittle is urs

என்னால் புதியதாக  கூட சிந்திக்க முடிய வில்லை 
உன் நினைவுகளின் துணை இன்றி ...
பின்பு எப்படி புதியதாக வாழமுடியும் எதிர்கால வாழ்கையை 
என்னால்  நீ இன்றி.

Friday, January 27, 2012

titte is urs

இதயத்தை விட ஒரு மோசமான திருடன் என்று 
யாரையும் சொல்ல முடியாது 
ஏனெனில் கண்கள் பார்த்து okay பண்ணின பெண்ணை 
இதயம் இப்படி சுட்டு (திருடி )விட்டதால்  தான்   
இன்று கண்களில் சாபத்தால் இதயத்தை விட்டு
அவள் வேறொருவருடன்  சென்று விட்டாள்...

Thursday, January 26, 2012

titte is ur choice

உன் முன் நின்று பேசுவது எதிரி என்றாலும் 
அவனது வார்த்தைக்கு மரியாதையை கொடு...
உன்னை பற்றி பின்னே பேசுபவன் நண்பன் என்றாலும் 
அவன் வார்த்தையை காதில் வாங்கிக்கொள்ளாதே 
ஏனெனில் இவன் நண்பன் இல்லை நம்பிக்கை துரோகி ...
என்ற உண்மையை உணர்ந்து வீட்டு விடு அடியோடு வெட்டிவிடு அவனது உறவை ...

Monday, January 23, 2012

titte is ur choice

என் உணர்வுகள் மட்டுமே துடித்து கொண்டிருகிறது ....
இதயம் ஏனோ  நின்று போகிறது ...
உன்னை நினைக்கும் போதெல்லாம் .

Sunday, January 22, 2012

titte is ur choice

என்னோடு நீ எப்போது ஓடி வருவாய் என்று எனக்கு தெரியாது ,
பெண்ணே !
என் நினைவுகளில் இப்போதும் நீ ஓடிக்கொண்டு தான் இருக்கிறாய்!!!

Saturday, January 21, 2012

titte is ur choice

என் இதயத்தை கருவறையாகவும் 
என் இதயத்தின் துடிப்பை தாலாட்டாகவும் 
மாற்றி உன்னை சுமந்து கொண்டிருக்கிறேன் ...
நீ உன் இதயத்தில் எனக்காக கல்லறையை 
கட்டிக்கொண்டிருகிறாய் 
என்பதை அறியாமல் ...

Thursday, January 19, 2012

titte is ur choice

என்னை நெருங்காத யாரும்
நிரந்தரமான வெற்றியை பெற்றதில்லை 
-தோல்வி 

Monday, January 16, 2012

titte is ur choice

உனக்காக நான் சிந்திய கண்ணீர் துளி கூட வற்றிப்போனது ..
ஆனால்
உன் மீது வைத்த பாசம் வற்றாமல் அப்படியே தான் இருக்கிறது ...
ஒரு முறை பார் என் உயிர் உன் காலடியில் 
உன்னை தங்க காத்துகொண்டிருக்கும்  பெண்ணே !

Saturday, January 14, 2012

titte is ur choice

பணத்தை தேடி பகலில் அலைந்து கொண்டே இருப்பவனும்..
இதயத்தை தேடி இருட்டில் செல்பவனும்
அமைதியாக தூங்கியதும் கிடையாது ..
பெற்ற பணத்தை கொண்டு சந்தோஷமாய் வாழ்ந்தவனும் கிடையாது .


Friday, January 13, 2012

titte is ur choice

நினைவுகள் வலிமையானவை
அதனால் அது உடைக்கப்படும் போது
இதயம் அடைக்கிறது
 நினைத்தவரை விட மனம் இல்லாமல் ...

Thursday, January 12, 2012

titte is ur choice

நேசிக்க இதயம் இருக்கிறது இங்கு..
நேசத்தை பெற நீ எங்கே இருகிறாய் என்று
தேடி அலைகிறது அவளை என் கண்கள் !