சுனாமி பூகம்பம் வரும் போதெல்லாம்
நிவாரணம் கொடுக்கும் அரசாங்கமும் ஒரு மனிதன் காதலில் சிக்கி சிதைந்து விடும் போது
நிவாரணம் தர வருவதில்லை ஏனெனில்
என்ன கொடுத்தாலும் சிதைந்த இதயம்
ஒன்று சேராது என்பதால் மட்டுமே.
நான் அவளுக்காக எழுதிய காதல் கடிதத்தை ...
என்னை சரியாக காட்டும் கண்ணாடியின் பிம்பமே "நேர் எதிராக" தான் காட்டுகிறது ,, அப்படி இருக்க அதை அவள் எப்படி உடனே புரிந்துகொள்ள முடியும் - மனதை தேற்றிக்கொள்ள நான் உவமைகளை தேடி அலைகிறேன் இப்படி!
அதிகமாக ஆசைவைக்க மனம் இருக்கிறது ...
அது யார் மீது வைப்பது என்பதில் தான் பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது .
பாசம் வைக்க பணம் தேவை இல்லை ..
உண்மையை சொல்லவேண்டுமெனில் காதலிக்க உருவம் தேவை இல்லை ... காதல் கண்ணில் தோன்றி மனதில் தான் முடியவேண்டுமே தவிர, உடலில் முடியகூடாது , என்னெனில் இறந்து விடுமே உடல்.
நாம் நேசித்தவரின் மனதை பொறமை என்ற
ஒரு ஆயுதம் கொண்டு நாம் எப்படி காயபடுத்தினோம்
என்பது ..
நம்மை ஒருவர் நேசிக்கும் போது நம் நண்பர்களிடம் கூட பேசவிடாமல் அந்த பொறமை (அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என ) தடுக்கும் போது தான் நம் தலையில் நறுக்கென கொட்டியதை போல் விளங்கும்.
இது தான் முற்றிலும் நிறைய பேர் வாழ்கையில் உணரப்பட்ட உண்மை
பெண்ணை உற்று உற்று பார்ப்பதும் இந்த கண்கள் தான்
பின்பு உருகி உருகி அழுவதும் இதே கண்கள் தான் ...
"முற்பகல் செயின் பிற்பகல் விளையும் " என்பது இதற்க்கு தானோ !
கடைசி வரை உன் இதயத்தில் நான் என் இதயத்தில் நீ - என்று அமைதியாக
மனதில் உலாவிக்கொண்டு இருப்பது தான் காதல் . அது பூங்காவிலும் கடற்கரையோரத்தில் உலவவிட்டுவிடாதீர்கள்
இதயத்திற் கென்று ஒரு மரியாதையை உள்ளது..
அதில் உண்மையானவரை அமர்த்துங்கள்
கடலின் நீரில் ship போகும் போது தான் கடலுக்கு அழகு ...
என் ரத்தக் கடலில் உன் friendship போகும் போது தான் எனக்கு அழகு -
நம் நட்பினால் தான் இன்னும் என் ரத்தம் உரையாமல் ஆறாக ஓடிக்கொண்டிருகிறது எனக்குள் ....
உன்னை கரை சேர்க்கவேண்டுமே வாழ்கையில் அதற்காக !