Thursday, June 30, 2011

tittle is urs

உன்னை நினைக்கும் போது என் நெஞ்சில் எதோ பரவசம்...
ஆனால் உன்னை பார்த்ததும் எதோ மனம் குளிர்ந்து என்ன அதிசயம்.
என் முகத்தில் எதோ கொஞ்சம் அச்சம் 
என் சிரிப்பிலும் வைத்தேன் அதை  மிச்சம் .. 

Wednesday, June 29, 2011

tittle is yours

என் உறங்கிய கண்களுக்குள்ளும் 
விழித்திருக்கிறது 
உன் நினைவுகள் ..

Tuesday, June 28, 2011

tittle is urs

என் கை பிடித்து அழைத்து செல்வாய் என நினைத்தேன் ..
என் கைகளை பூ தூவ வைத்து விட்டாயே உன் மணமேடைக்கு 

Saturday, June 25, 2011

tittle is urs

ஏ பெண்ணே உன்னை பார்க்கும் வரை எனக்கானவள் யார் என்று தேடிகொண்டிருந்தேன் 
உன்னை பார்த்த பின் நான் எங்கே சென்றேன் என்று தேடி கொண்டிருக்கிறேன் ...
ஏனெனில் நான் தொலைத்த என்   இதயத்தை எடுத்துக்கொண்டு நீ எங்கே போய்விட்டாய் ... கொடுத்து விட்டு போ 

Friday, June 24, 2011

tittle is urs

என் சந்தோஷமான தருணங்களில் என்னால் வாய் விட்டு சிரிக்கமுடியவில்லை 
நீ என் அருகில் இல்லாததால் ..
என் சோகமான தருணத்தில் என்னால் அழமுடியவில்லை நீ என் கண்களை பார்த்துகொண்டு அருகில் இருந்ததால்

Wednesday, June 22, 2011

tittle is urs

உன் அன்பை  பிறர் மதிக்கவில்லை என்று கவலை படாதே..
மாறாக அவர்களை நீ கண்டுகொள்ளாமல் விட்டுவிடு.
அது தான் நீ அவர்களுக்கு கொடுக்கும்  சரியான தண்டனை .

Tuesday, June 21, 2011

tittle is urs

நீ என்னை நினைக்கும் போது பட்டாம்பூச்சியாய் 
என் மனம் சிறகடித்து பறக்கிறது.
நீ என் மீது கோபம் கொண்டதும் 
என் மனம் பாரம் தாங்கிய தராசாய் கிழே சரிந்துவிடுகிறது .


Monday, June 20, 2011

tittle is urs

ஊர் முழுவதும் தேடி அலைகிறார்கள் கடவுளை ..
நன் கண்டேன் அதை உன் அன்பெனும் கடலில் ...

Saturday, June 18, 2011

tittle is urs

உன்னை பிரிய மனம் இன்றி நீ சென்ற பாதையிலே பின் தொடர்ந்து வந்தேன் 
உன் நிழலை பிடித்துகொண்டு 
அது கடலில் சென்று மறைந்ததை கண்டு தான் புரிந்துகொண்டேன்  நீ 
சூரியன் என்று .

Friday, June 17, 2011

tittle is urs

சோர்வடைந்த என் இதயத்தால் இதற்குமேலும் துடிக்கமுடியாது 
என்ற நிலை வந்தும் என் இதயம் துடிப்பை நிறுத்தவில்லை 
ஏன் தெரியுமா ? 
அதற்குள் உறங்கிகொண்டிருக்கும்  உன்னை எழுப்பி விட மனம் இல்லாததால்  

Thursday, June 16, 2011

tittle is urs

வெட்டிய ஆலமரம் தனியே தரையில் விழலாம் 
ஆனால் அதன் வேரை தனியே பிரிக்கமுடிவதில்லை
அதுபோலத்தான் நானும்- ஏற்படும் காயங்கள் என்னை பூமியில் தள்ளலாம் 
ஆனால் ஒருபோதும் உன் நினைவுகள் என் மனதை விட்டு 
பிரிக்க இடம் கொடுத்ததில்லை

Wednesday, June 1, 2011

tittle is urs

உணர்வுகளின் வெளிப்பாடுகள் கட்டுபடுத்த படலாம்
ஆனால் உணர்வுகள் எல்லோருக்குள்ளும் ஒரே மாதிரித்தான் 
அணை திறந்த வெள்ளமாய் ஓடிகொண்டிருகிறது...
அனைவருமே மகாத்மா காந்தி ஆகிவிடமுடியாது ...
அப்படி ஆகிவிட்டால்?... மகாத்மா வாக அவர் இருந்து இருப்பாரா