நான் என் இதயத்தில் உன்னை செதுக்கிவைகவில்லை,
உனக்கு வலிக்கும் என்று ..
நான் என்னையே சிதைத்து உன்னுள் கலந்து விட்டேன் ,
நம் நட்பின் பலம் கூடவேண்டும் என்று ..
உனக்கு என்னை அதிகமாக பிடிக்கும் என்று எனக்கு தெரியும்
ஆனால்
அதை ஒரு முறை கூட
மனம் திறந்து சொல்லாதது ஏன்?
உன் உதடுகளை விட
அதிகமாக உன் மௌனம் தான் என்னிடம் பேசுகிறது ..