Saturday, December 10, 2011

tittle is urs

கை விரல் நீட்டி காத்து கிடக்கிறேன் ...
கண் விழி திறந்து அழைப்பாயென...

Monday, December 5, 2011

tittle is urs

வழக்கை என்பது ஒரு பட்டம்...
பறந்து பார்ப்பதில் உன்னகென்ன நட்டம் (நஷ்டம்)

Tuesday, November 22, 2011

tittle is urs

உதிர்ந்து கொண்டே இருக்கிறது என்று கவலை கொள்ளாதே ..
நான் அடுத்து வளர்வதால்  தான்
அது உதிர்கிறது என  சந்தோஷபடு - முடி 

Friday, November 18, 2011

tittle is urs

உன்னை  சுற்றி பனி துளிகள்
கொட்டிக்கொண்டே இருக்கிறது ...
உனக்கு  குளிர் வந்துவிடுமோ என்று..
நான் எரிந்து கொண்டே இருக்கிறேன்..

Thursday, November 17, 2011

tittle is urs

என்னை கூச்சபடுத்த கூட்டம்  வேண்டாம்
குட்டி பிசாசு உன் நினைவு போதும் :-)

Monday, November 14, 2011

tittle is urs

கட்டுப்படுத்திக்கொண்டு இருந்தாலும்..
கட்டவிழ்த காளையாய்  என்னை மாற்றிவிடுகிறது -
என்னவள் பேச்சு 

Thursday, November 10, 2011

tittle is urs

என் பாசத்தை  பார்த்து இதுவரை 
என்னால் பார்க்க முடிந்திடாத உன் மனமே
என்னைத்தேடி வந்துவிட்டது ..
பார்த்த நீ மட்டும் வரவிலையே இன்னும்..
அடையாளம் தெரியாமல் போனதோ 
உனக்கு நெடு நாள் சென்றுவிட்டதால் .

Saturday, November 5, 2011

tittle is urs

வாழ்கையே நிலை அற்றது  என்று தெரிந்தும் 
நாம் ஏன்நேசிக்கிறோம் ஒருவரை மட்டும் 
இவர் தான் நிரந்தரம் என்று ?

Thursday, November 3, 2011

tittle is urs

நண்பனிடம் உத்தரவு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை..
நன்றி சொல்ல வேண்டிய தேவையும் இல்லை 
இதை எதிர்பார்க்காத உறவே நட்பு..
சொல்லி  அதை நீ கலங்கப்படுதிவிடாதே .

Wednesday, November 2, 2011

tittle is urs

என்றைக்கும் இல்லாமல் நீ இன்று பேசி விட்டாய் ,
இப்போது நான் பதில் பேச முடியாமல் தொடர்ந்தேன் 
என் மௌன விரதத்தை ...

Tuesday, November 1, 2011

tittle is urs

தொண்டை வரை துக்கம் அடைத்தும் ,
சிறிதும் அதை நான் என் நெஞ்சினை தொட அனுமதித்ததில்லை,
எங்கே அது உன்னை தாக்கிவிடுமோ  என்று.

Monday, October 31, 2011

tittle is urs

வெட்ட வெட்ட வளரும் நகம் ...
நீ ஒருமுறை வெட்டி விட்டாய் நகத்தை அல்ல என் மனதை  
இன்னும் எனக்கு ஆறவில்லை அந்த ரணம் 

Friday, October 28, 2011

tittle is urs

நான் உன்னிடம் பேச வாய் திறக்கும் முன்னரே ,
என் மனம் பேச தொடங்கி விட்டது உன்னுடன் .
எனக்கு போட்டி வேறு யாரும் அல்ல 
இங்கு எனது மனதை தவிர!

Thursday, October 27, 2011

tittle is urs

உன் மூச்சுக்  காற்றுக் கூட   என் மீது பட்டதில்லை..
பின்பு எப்படி நீ என்னுள்  வந்தாய் ...

Tuesday, October 25, 2011

tittle is urs

சிரிக்கதெரிந்தவனுக்கு சிறகுகள் தேவை இல்லை 

Monday, October 24, 2011

tittle is urs

ஒருவரையும் கட்டாயப்படுத்தாதே 
முடிந்தால் உன் அன்பினால்  அவர்களை கட்டுப்படுத்து ...

Saturday, October 22, 2011

tittle is urs

எத்தனை பேர் உன்னை தொட்டாலும் இன்றும் 
களங்கம் இல்லாமல் நீ இருப்பது எப்படி = "வெற்றி" 

tittle is urs

வானில் பறக்க இல்லை  எனக்கு சிறகு ...
பேசி பழக நீ இருக்கும் போது 
உன் விரல்களே எனக்கு ஆகிறது   இறகு 
மழை மேகம் கண்டால் ஆடிடுதே  மயில்..
நீ பேசிய போது உணர்தேன் நீ ஒரு மஞ்சள் நிற குயில் ...

Friday, October 21, 2011

tittle is urs

கவிதையை படைபவரின் அறிவு திறனை விட
கவிதையை படிப்பவரின் அறிவுத்திறனே 
அந்த கவிதைக்கு உண்மையான மதிப்பை(அர்த்தத்தை)  கொடுக்கும் ...

Thursday, October 20, 2011

tittle is urs

பார்த்த பார்வையிலே என்னை கத்தரித்து சென்ற 
நீ ஒரு  வெட்டுகிளியோ!!! 

Wednesday, October 19, 2011

tittle is urs

என்னிடம் இருக்கும் உன் நினைவுகளை 
திரும்பி தர சொல்லி கேட்க்க நீ தயங்க வில்லை ...
என் ஆன்மாவிடம் போய் உன் நினைவுகளை 
அழிக்கும் படி சொல்ல   எனக்கு தைரியம் இல்லை... 

Tuesday, October 18, 2011

tittle is urs

சத்தம் இல்லாமல் அழ நினைத்தேன் அதன் விளைவு 
இன்று என்னை சுற்றி எல்லோரும் அழுகின்றனர் சத்தமாக  

tittle is urs

மனசு ஓடியும் போது சத்தம் கேட்பதில்லை....
ஆனால் இதயம் ஓடியும் போது அதில் ஓடும் ரத்தம் கேட்கும்
உன்னால் தானே இது எல்லாம் என்று இதயத்திடம் (யோசிக்காமல் நேசித்ததால் தானே இப்படி என்று ) ...

tittle is urs

பாசத்துக்கு அடிமையானவர்களே 
சோகத்தால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர் 
சொல்ல முடியாத வேதனைகளிலும் 
அவர்கள் பாசத்தை எதிர்ப்பதில்லை..
சோகத்தை வெறுப்பதில்லை ,..

Monday, October 17, 2011

tittle is urs

என்னோடு நீ இல்லை.. 
அதனால் தான் எனக்கு இங்கு தொல்லை.. 
இதற்குதான் ராமரும் ஓடிச்சார் வில்லை..
நான் இனி இந்த விளையாட்டுக்கு வரலை.  

Sunday, October 16, 2011

tittle is urs

நீ அழும் போது உன் கண்ணீரை துடைத்து விடும் 
எந்த உண்மையான  நண்பணும்... 
நீ  சிரிக்கும் நேரத்தில் அருகில் இருக்க நினைப்பதில்லை  

Friday, October 14, 2011

tittle is urs

மரணம் கூட என்னை அடிக்கடி நெருங்கி பார்க்க ஆசை கொள்கிறது ...
உன்னால்  ஏன் முடியவில்லை ...

tittle is urs

நீ என்னிடம் எதையுமே விரும்பி கேட்டதில்லை...
என் மௌனத்தை தவிர ...
என் மௌனம் என்னை கொன்றே விடும் என்று தெரியாமல் 

Thursday, October 13, 2011

tittle is urs

ஆசை பட்டது ஏதும் இன்னும் என் கை சேரவில்லை ..
என்னிடம் உள்ள எதன் மீதும் நான் ஆசை படவில்லை..
இருந்தும் பத்திரமாக வைத்து இருக்கிறேன் அவற்றை 
அதை  நேசித்த யாரோ அவற்றை  தேடிவரும் போது 
பத்திரமாக அவர்களிடம் கொடுப்பதற்காக !

Wednesday, October 12, 2011

tittle is urs

நான் நேசித்த எதுவும் என் அருகில் இன்று இல்லை ...
நல்ல வேலையாக  இன்னும் நான் என்னை நேசிக்க தொடங்கவில்லை ..
எல்லாம் நன்மைகே என்பது இதற்குத்தானா 

Tuesday, October 11, 2011

tittle is urs

உன் அன்பில் கலந்து இருக்க ஆசை பட்டேன் ..
நீயோ என்னை காற்றில் கலந்து இருக்கும் படி செய்து விட்டாய் ...
எரிந்து கொண்டிருக்கும் உடலில் இருந்து வந்த குரல் ..
யாருடையதோ பாவம் 

Monday, October 10, 2011

tittle is urs

என் கண்களால் நேரடியாக  பார்க்க முடியாத விஷயமாக  நான் நினைத்தது ஒன்று தான் 
அது என்  இதயம் 
இப்பொது உணர்ந்தேன்  
இரண்டு 
அதில் நான் செதுக்கிய உன் உருவம் 

Sunday, October 9, 2011

tittle is urs

உனக்கு நன்றிகள் சொல்ல என்னிடம் உள்ள வார்த்தைகள் போதாது ..
அதனால் என் நட்பையே பரிசாக கொடுக்கிறேன் உன் இதயத்துக்கு 

Saturday, October 8, 2011

tittle is urs

எத்தனை காலம் தவம் கிடந்தேனோ உன்னை பெறுவதற்கு 
இன்னும் எத்தனை காலம் வரம் கிடக்க வேண்டுமோ நீ இங்கு வருவதற்கு 

Friday, October 7, 2011

tittle is urs

உன் கண்களில் நான் என்னை பார்க்கும் போது 
எனக்கு வலிக்கவில்லை 
ஆனால் 
உன் கண்ணீர் துளிகளிலும் என்னை பார்த்த போது 
அந்த நிமிடம் எனக்கு மட்டும் அல்ல என் இதயத்துக்கும் வலித்தது 

Thursday, October 6, 2011

tittle is urs

துடி துடிக்கும் என் இதயத்தில்
பட படக்கும் உன் நினைவுகள் 
சல சலக்கும் என் கொலுசுகளை ரசிக்கும்..
சிலு சிலுக்கும் உன் பார்வை அசைவுகள் 

Wednesday, October 5, 2011

tittle is urs

நீ பேசிய வார்த்தைகள் நூறு ..
பேசாத மௌனத்தையும் என்னிடம் கூறு ..
மணல்  மேல் ஓடும் ஆறு ...
என் உயிர் நீ தான் திரும்பி பாரு . 

Tuesday, October 4, 2011

tittle is urs

என் கண்களால்   ஈர்த்துக்கொண்டு கனவுகளை
சேர்த்துவைக்கிறேன்  இதயத்தில் உன் நினைவுகளை 

Monday, October 3, 2011

tittle is urs

படித்த வரிகளை மறக்க முடியும் 
பிடித்தவர் சொன்ன வார்த்தைகளை மறக்க முடியுமா 
கசந்த காயை வெறுக்க  முடியும் 
சுவைத்த கனியை வெறுக்க முடியுமா 

Saturday, October 1, 2011

tittle is urs

நான் கண் திறந்தும் கனவுகள் காண்கிறேன்
அதிலும் நீ தான் ... 

tittle is urs

உன் மனதை திறந்து யாரிடம் உண்மையாக உன்னால் பேசமுடிகிறதோ
அவர்கள் தான் நீ கண்ணாடியின் முன் பார்க்கும் உன் பிம்பம் போன்றவர்கள் 
அவர்கள் மட்டுமே நீ அழ நினைத்தும்  தங்களது கண்களில் கண்ணீரை அணிந்து நிற்பர்

tittle is urs

வெட்கப்படும் போதெல்லாம் கேள்விகளை கேட்கிறாய் என்னை 
என் இதழ்கள் பதில்கள் சொல்ல மறுப்பதில்லை 
ஆனால் என்னில் ஏற்பட்ட வெட்கம் தடுக்கிறது பதிலை 

tittle is urs

என் கண்கள் உன்னை பார்க்கவேண்டும் என்று இமைக்கிறது ,,
என் இதயம் உன்னை பார்த்தல் யாரேனும் பிரித்துவிடுவார்களோ என்று துடிக்கிறது ..
இதில் எதை செய்வது என்று தெரியாமல் நான் தவிக்கிறேன் அமைதியாக  

tittle is urs

உன் விழிகளினாலே உண்கிறாய் என்னை ..
இருந்தும் முழுவதுமாய் நான் இங்கே ...

tittle is urs

சிரிப்பதற்காக கடவுள் உனக்கு கொடுத்த நேரத்தை 
அழுவதற்காக பயன் படுத்தாதே 
பணம்  கொடுத்து விலைக்கு  வாங்க நீ ஒன்றும் சிலை அல்ல 
என் இதயக் கடலில் அடித்துக்கொண்டிருக்கும்  அலை 

Friday, September 30, 2011

tittle is urs

தூய்மையான  இதயம் கொண்ட நேசித்தவரின் தோள்களின் மேல் சாய்ந்து தூங்குவதும் ..
தாயின் கருவறையில் நாம்  தூங்கியதும் ...
எதற்கும் இணையாக கூற இயலாது 

Thursday, September 29, 2011

tittle is urs

நம்  உடலை காயப்படுத்த பலபேர் இருக்கலாம் ..
ஆனால் நம்   இதயத்தை நாம்  பார்த்து பார்த்து நேசித்தவர்களால் மட்டுமே காயப்படுத்த முடியும். 

Wednesday, September 28, 2011

tittle is urs

உன் பெயரை சொல்ல ஒரு நாழி போதும் ,,
ஆனால் உன்னை வரையறுக்க  என் வாழ்நாள் தீரும் .

Tuesday, September 27, 2011

tittle is urs

உன்னோடு  மனம் விட்டு பேச ஆசை பட்டேன் ..
நீயோ என் மனதையே விட்டு  விட்டாய்
தனியாக நான் பேசிக்கொள்ள 

Monday, September 26, 2011

tittle is urs

உன்னை நினைத்து கொண்டிருக்கையில் 
என் விரல்கள் என் மீது பட்டாலும் 
நீ தொட்டதுபோலவே உணர்கிறேன் ...

Sunday, September 25, 2011

tittle is urs

என்ன தான் நடுகடலில் குளித்தாலும் கண்கள் நனைவதில்லை தண்ணீரில் ..
ஆனால் எப்போது நாம் பாசமானவர்களின்   பாசத்தில் சிக்கிவிடுகிரோமோ அப்போதே கண்களும் கலங்கி தானே போகசெய்கிறது 
கண்ணீரில் 

Saturday, September 24, 2011

tittle is urs

உன்னை குழந்தையாக நினைப்பதால் தான் இன்னும்
பேசகற்றுகொள்ளததுபோல் என்னிடம் ஊமையாக இருக்கிறாயோ

tittle is urs

உன்னை மகனாக சுமக்க  எனக்கு வயது இல்லை ...
ஆனால் 
உன்னை என் இதயத்தில் சுமக்க பாசம் அதிகம் இருக்கிறது ..
சுமந்து கொண்டிருக்கிறேன் அதனால் உன்னை (உன் நினைவை )

Thursday, September 22, 2011

tittle is urs

நான் கண்களை திறந்துகொண்டே முழ்கிவிட்டேன் 
உன் நினைவுகள் என்னும் அலைகளில் 

Wednesday, September 21, 2011

tittle is urs

நான் என்னை இழந்து உன்னை பெற்றேன் நேற்று ...
நீ என்னை மறந்து  இன்னொருவரை பெற்றாய் இன்று ....
அப்படி எனில் நாளை என்ன செய்வாய் ...
வாழ்கை ஒரு வட்டம் என்பது இது தானா 

Tuesday, September 20, 2011

tittle is urs

நாம் சிறிக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் பலரின் 
மனதை புரிந்து கொள்ளும் முன், 
நாம் அழும்போது நம்மோடு சேர்ந்து வருந்தும் நம் 
மனதின் எண்ணத்தை புரிந்து நடந்துகொண்டால் 
உலகத்தில் நம்மை  வெல்ல பிறக்கபோகின்றவனும்
ஒருவனும்  இல்லை 

Monday, September 19, 2011

tittle is urs

உன்னோடு நடந்து செல்லும் போது  வார்த்தைகள்  என்னிடம் இல்லை 
என்னை விட்டு நீ  நகரும் போது என்னிடம் நானே இல்லை  

Saturday, September 17, 2011

tittle is urs

ஒவ்வொரு முறை தோற்கும் போதும் துவண்டு விடாதே ...
அடுத்தமுறை நீ எதை செய்யகூடாது என்பதை 
இன்று  கற்றுக்கொண்டிருகிறாய்
என்பதை மறந்து 

Friday, September 16, 2011

tittle is urs

நான் எது செய்தாலும் தொந்தரவாகவே நினைக்கும் நீ,
நீ என் மனதுக்குள் செய்யும் தொந்தரவை புரிந்து கொள்ளதாது  ஏன்

Thursday, September 15, 2011

tittle is urs

தொட்டு பார்க்க  ஆசை தான் ..
இருந்தும் தொடமுடியவில்லை
உன்னை சுமந்து கொண்டிருக்கும் என் இதயத்தை 

Monday, September 12, 2011

tittle is urs

அரைக்க அரைக்க தேயுமாம் அம்மி 
இத சொல்லி கொடுத்தது   என் மம்மி 
அதுக்காக என்ன நினைக்காத நீ டம்மி 
உனக்கு  மின்னாடி இது ரொம்ப கம்மி 
ஹ ஹா  ஹ

Saturday, September 10, 2011

tittle is urs

கண் மூடியே கிடக்கிறேன் உன் முன் .,..
காலம் முழுதும் நீ என்னை கண்திறந்து பார்த்து கொண்டிருப்பாய் என்பதற்காக 

Thursday, September 8, 2011

tittle is urs

சோம்பலிலும் உன் நினைவுகள் 
என் கண்களை பளிச்சிட வைத்தது  ...
என் வீட்டு  கண்ணாடியில்  கண்டேன் இந்த விந்தையை...


Wednesday, September 7, 2011

tittle is urs

விட்டு கொடுப்பதும் ..
விட்டு விலகுவதும் ..
மனிதர்களாகிய நாம் தானே தவிர..
நம்மில்  புதைந்து கிடக்கும் நம்முடைய  மனது அல்ல 

Tuesday, September 6, 2011

tittle is urs

நினைத்தவரோடு  வாழக்கையில் வாழமுடியவில்லை 
என்று  நினைத்து வருந்தாதே..
நீ அவர்களின் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய் 
இப்போது   என்பதை மறந்து ...

நிஜத்தை விட நினைவுகளின் உணர்வுகளே வலிமை ஆனவை ஆழமானவை 
அழகானவை யாராலும் திருடமுடியதவை 
என்றும் உனக்கானவை 

Monday, September 5, 2011

tittle is urs

நெருக்கமான உடைகளையே  வெறுக்கும்  
என் மனம் ..
உன்னிடம்  எப்படி நெருக்கமானது ...

Sunday, September 4, 2011

tittle is urs

இதயத்தில் என்ன சத்தம்,..
இனிக்குதே நினைக்கையில் நித்தம்...
மனசுக்குள் தினம் யுத்தம் ...
உன் காதில் இப்பொது ரத்தம்...
அடங்கமாட்டேன் நானும்..
அளக்கமுடயுமா உன்னால் வானம் 

Saturday, September 3, 2011

tittle is urs

உன் மனம் எந்த அளவு உண்மையான  நண்பர்களை 
உன் அருகில் வைத்துக்கொள்கிறதோ ...
அதே அளவு உன்  கவலைகள் உன்னைவிட்டு  விலகி நிற்கும் ..
இது உண்மை 
உணர்ந்து பார் ... உண்மையானவர்களின்  மத்தியில் 

tittle is urs

உடலுக்குள் ஓர்  சிலிர்ப்பு ...
பனிக்காற்றால்  வந்தது என நினைத்தேன் ...
பின்பு தான் தெரிந்தது வந்தது தென்றல்(நீ) ஆயிற்றே சிலிர்க்காமல் இருக்குமா 

Friday, September 2, 2011

tittle is urs

என் கண்ணில் வந்த கண்ணீரை 
துடைத்து விட்டது உன் விரல்கள்
கண்ணீர் அடங்கியும் வரவைத்தேன் கண்ணீரை வேண்டுமென்றே 
இன்னொரு  முறை நீளுமே  உன் விரல்கள் என் கண்ணீரை துடைக்க என்று

Thursday, September 1, 2011

tittle is urs

உன்னை அணைக்க கைகள் இருந்தும் அருகில் நீ இல்லை ...
என்னை நினைக்கும் அளவுக்கு உன்னிடம் மனம் இருந்தும் அதில் நான் இல்லை
பூ இல்லாத ரோஜா செடிக்கு மதிப்பு எவ்வளவு ...
நீ இன்றி என் மதிப்பும் அவ்வளவே 

tittle is urs

தொட்டு பார்க்க  ஆசைதான் 
இருந்தும் 
கைகள் தடுத்தது 
மெழுகில் செய்த  ஆப்பில்  போலே அவளது  கன்னங்கள் 

Tuesday, August 30, 2011

tittle is urs

கடவுளை(அன்பை ) நம்புகிறவன் நல்ல நண்பனை பெறுகிறான் ...
கடவுளை எதிர்ப்பவன் ஒரு கொடூரமணம் கொண்ட எதிரியை அடைகிறான்...
எனக்கு நீ கிடைத்து விட்டாய் ...  நான் உன்னில் கடவுளை உணர்கிறேன் .






tittle is urs

என்ன தான் நாம் சுதந்திர நாட்டில் வசித்தாலும்...
ஒரு வயதை கடந்ததும்   அடிமைகள் ஆகி விடுகின்றோம் 
கணவனிடமோ / மனைவியிடமோ 
ஏன் இந்த அவல நிலை 

figure kidaikalanaalum kavalai ...
kidaichalum kavalai ...

Monday, August 29, 2011

tittle is urs

எத்தனையோ மந்திர சொற்கள் பூமியில் இருக்க ...
எப்பொதும் என்னை காப்பாற்றும் ஒரே மந்திர சொல்லாக 
நான் நினைப்பது (நட்பை) மட்டுமே ...

tittle is urs

என்ன தான் மாற்றம் வரவேண்டும் என்று 
நாம் நினைத்தாலும்..
ஒரு நாளும் நாம் மாறுவதில்லை 
நம்மை மாற்ற நினைப்பவரை அருகில் சேர்ப்பதும் இல்லை 
இது தான் உண்மை ....

Saturday, August 27, 2011

tittle is urs

nali's todays தத்துவம் ,
sight அடிக்க பொண்ணு தேவையில்லை  
நமக்கு கண்ணு இருந்தா  போதும் ...
உயிர் வாழ பூமி  மண்ணு தேவையில்லை
backery bun போதும்
ஹஹஹா 

Friday, August 26, 2011

tittle is urs

என்ன தான் நீ இரும்பினால் ஆகிய உடையை போட்டு மூடிகொண்டாலும்..
உன்னை விரும்பும் உண்மையான கண்களால் உன் மனதை காணமுடியும் ..
மனதுக்கு சிறை  போட நாம் யார் ...

Thursday, August 25, 2011

tittle is urs

உண்ணவும் நேரம் இல்லை ..
உறங்கவும் நேரம் இல்லை..
இருந்தும் பசி ஆரிக்கொள்கிறது உடல்  
என்னவள் உன்னை நினைத்ததும் :-) 
உன் நினைவு என்னும் இறகு என் இமைகளை தடவி 
என் விழிகளின் வலியையும் நீக்கியது 

Wednesday, August 24, 2011

tittle is urs

கண்ணை மூடி தேடிகொண்டிருகிறாய் நான் எங்கே என்று..
ஒரு பொழுதும் உனக்கு தோன்ற வில்லையா...
நீ தான் நான் என்று

Tuesday, August 23, 2011

tittle is urs

நாம் முழு இதயத்தை  இழக்காமல் ஒரு இதயத்தின் பாசத்தை முழுவதும் பெரமுடிவது இல்லை 
அப்படி கிடைத்த  உன்னை பார்த்து  அது பொறமை படுவதும் இல்லை 
ஆனால் எப்போது பிறர் உன்னை தன்னிடம்  இருந்து  பிரித்து செல்வதாக அது உணர்கிறதோ அன்று அவர்களை பகைக்கவும் தயங்குவதில்லை 

Monday, August 22, 2011

tittle is urs

நாம்  நேசித்தவரின் உடல் நம்மை வெறுக்கலாம் ..
ஆனால்
நம்மால் நேசிக்கபடவரின் மனம் ஒரு போதும் நம்மை வெறுப்பதும் இல்லை
நம்மை விட்டு விலகுவதும் இல்லை

Saturday, August 20, 2011

tittle is urs

உன்னை நான் தண்ணீர் விட்டும் வளர்க்கவில்லை ...(செடி) 
என் கண்களில் கண்ணீர் விட்டும் வளர்க்கவில்லை(காதல்)
 இருத்தும் 
நீ வளர்ந்தாய் என் மனதில் ...
பாசம் மட்டுமே விட்டதால்  (நட்பு)..


tittle is urs

எல்லோரை  பார்த்ததும் வெட்கப்பட்டால் வெட்கத்துக்கு மதிப்பில்லை
பிடித்தவரை  பார்த்து வெட்க்கபட்டால் அந்த வெட்கத்துக்கு அளவில்லை ..
feel it  

Friday, August 19, 2011

tittle is urs

முதல் காதலின் வலியை அனுபவித்தவன் 
என்றுமே ..
அடுத்து தன்னை நேசிக்கும் உண்மையான மனதை அதிகம் நேசிக்க  விடமாட்டான் ...
ஏமாற்றத்தின் வலி தன்னை நேசிப்பவரை தாக்கக்கூடாது  என்பதால் மட்டுமே 

Wednesday, August 17, 2011

tittle is urs

நானும் அடிமை தான் ..
என்னை நேசித்த உன் மனதின் முன்பு ... மட்டும் 

Saturday, August 13, 2011

tittle is urs

சூரியன் மேல் நெருப்பை விட்டு எரிக்க முடிந்தவர் யாரும் அல்ல ..
நிலவை நீர் விட்டு  குளிர்விப்பவனும் எவனும் அல்ல; 
உன் கோவம் என்னும் சூரியன் என்னை பிறரிடம் இருந்து காக்கிறது..
உன் அன்பு என்னும் நிலவு என்னை சாந்தமாய் வைத்துக்கொண்டிருகிறது ..
எப்பொதும் அதனால் தான் யாரும் தொடமுடியாத வானமாய் நான் அங்கு 
நிம்மதியாக  உறங்கி கொண்டிருக்கிறேன் .

Thursday, August 11, 2011

tittle is urs

எத்தனை வேதியல் மாற்றம் உடலில் ஏற்பட்டாலும் ...
நண்பனை பார்க்கும் போது அவன் கண்களில் நட்பு தான் ஓங்கி நிற்கும் ..
இதயத்தில் உருக்கொண்ட நட்பு உடலாலும் சாய்க்க படுவதில்லை 
உடலில் ஏற்படும் மாற்றத்தாலும்  சிதைக்க படுவதில்லை..
இது தான் நட்பின் பெருமை .

Wednesday, August 10, 2011

tittle is urs

எத்தனை துன்பங்கள் என்னை தொடர்ந்தும் தாங்கி கொண்ட எனக்கு  ..
உன் பின்னே  சிறு எறும்பு தொடர்ந்து வந்ததை   தாங்கி கொள்ள முடியவில்லையே ...

Tuesday, August 9, 2011

tittle is urs

என் கண்கள் கலங்கும் போது கவிதையும் வருகிறது..
கண்ணீர்த்துளிகளில் வேகத்தை மிஞ்சுவதாய் ..
அந்த நிமிடத்தில்  என் விரல்கள் கண்ணீரை துடைபதற்கு முன்பே ... 
நீர் வற்றி போகிறது கண்களில் 
கண்ணீரும் பயந்துவிடுகிறதோ என் கவிதையை கேட்டு

Saturday, August 6, 2011

tittle is urs

நாளுக்கு
நாள் 
நாட்கள் 
நகர்ந்துகொண்டிருந்தாலும் 
நகராமல் 
நம்மோடு 
நகைத்து கொண்டிருக்கும் ..
நட்புக்கு 
நன்றி சொல்வோம் ..
நட்புடன் 
நான் 
நளினி. 

Monday, August 1, 2011

tittle is urs


இலக்கணப்பிழை யோடு எழுதினாலும் 
நட்புக்கு கற்பு மாறுவதில்லை ...
நம் நட்பை போல 

Friday, July 29, 2011

tittle is urs

எனக்கு இதயம் வலிக்கும் போதெல்லாம் நான் உன்னிடம்  பேச ஓடிவருகிறேன் ..
ஏனென்றால் நண்பன் என்பவன் தான் எல்லா வலிக்கும் 
பக்கவிளைவில்லாத மருந்து என்பதால் ..

Tuesday, July 26, 2011

tittle is urs

நான் இந்த உலகத்தில் பிறந்து வாழ்வதை விட 
உன் இதயத்தில் நண்பனாக  வாழ்வதை வரமாக நினைக்கிறன்.

Monday, July 25, 2011

tittle is urs

எத்தனை முறை நீ என்னை வெறுத்தாலும் என்  மனம் உன்னையே நினைக்கும்..
எந்தனை முறை நான் இறந்தாலும் என் உயிர் உனக்காகவே பிறக்கும் 

Thursday, July 21, 2011

tittle is urs

உன் முகம் பார்க்காத அந்த நிமிடங்களில் நான் கண்ணை மூடி கொள்கிறேன்..

நீ அருகில் வந்ததும்
உன் முகம் பார்த்த நிமிடத்தில் நான் கண் இமைக்கவும் மறந்து போகிறேன் .

Wednesday, July 20, 2011

tittle is urs

வாழ்கையே விடுகதையாக போன பின்பும்

நான் தேடி கொண்டிருக்கிறேன் விடையை அல்ல?,,
எந்த கேள்விக்கு என் வாழ்க்கை இப்படி பதிலானது என்று கேள்வியை ..

Monday, July 18, 2011

tittle is urs

பெண்ணே! நான் உன்னை நினைத்து வாடிகொண்டிருகிறேன்
நீ யாருடனோ  வாழ்ந்துகொண்டிருகிறாய் ...
என் இதயம் தொடர்ந்து  உருக்கத்தில் ..
நீ உன் நலனுக்காக முழ்கிவிடாய்  விரதத்தில் ...

Saturday, July 16, 2011

tittle is urs

நான் படித்து படித்து கூட என்னை மறந்ததில்லை
ஆனால்
உன்னை நினைக்க தொடங்கிய நாள் முதல் என் நினைவே என்னிடம் இல்லை :-)

Friday, July 15, 2011

tittle is urs

உடைந்த ஆணின் மனம்:
புத்தி தெரிவதற்கு  முன்
எனக்கு பேச சொல்லி கொடுத்தவள் என் தாய்
பாசத்தை சொல்லி கொடுத்தவள் என் தாய்
புத்தி தெரிந்ததும் எனக்கு
காதல் சொல்லிதருவதாய் சொல்லி காதலி நிற்கவைத்தால்
என்னை நடுத்தெரு  நாய்

Thursday, July 14, 2011

tittle is urs

உண்மையான ரசிகனால் மட்டுமே ஒரு அர்த்தமுள்ள கவிதையை படைக்கமுடியும்...
ஒரு இதயத்தின்  உண்மையான பாசத்தால் மட்டுமே ஒரு அழகான அன்பை வெளிபடுத்த முடியும்..

Tuesday, July 12, 2011

tittle is urssss

உன்னை பார்க்கும் முன்பு வரை என் இதயம் ரத்தத்தால் நிரப்ப பட்டது என்று தான் நினைத்தேனடி ..
இப்போது  அறிந்துகொண்டேன் இரத்தமும் வற்றி நீரால் நிரம்பியது என் இதயம் மட்டும் அல்ல என் கண்களும் என்று..

Friday, July 8, 2011

tittle is urs

ஆணோ பெண்ணோ உடலளவில் பலகீனமானவர்களாக இருபினும்..
மனதளவில் உங்களை பலபடுத்துவது உங்களிடமும் ...
நீ பழகும் நண்பனை பொறுத்துமே அமைகிறது ..

Wednesday, July 6, 2011

tittle is urs

பூச்செடியில் மொட்டு கூட விடிந்ததும் பூவாக மலர்ந்துவிடும்(திறந்துவிடும்)  ..
ஆனால் உன் இதயம்    இன்னும் மணம்
 வீச மலரவில்லையே ....
உன்னை சுற்றி சுற்றி பறந்துவரும் வண்டாக நான் காத்துகொண்டிருகிறேன் .

Tuesday, July 5, 2011

tittle is urs

நில் - ஆபத்தில் இருக்கும் நண்பனின் அருகில்..
கவனி - உன் எதிரியின் முன் பேசும் போது..
செல் - உன்னை புரிந்துகொள்ளத மனிதனிடம் இருந்து  ..

Monday, July 4, 2011

tittle is urs

உன்னிடம் என்னை அடிமை ஆக்க நீ 
உன் இதயத்தை திறக்கவேண்டிய அவசியமில்லை 
உன் கண் இமைகளை திறந்து என்னை பார்த்தாலே போதும் !!!

Saturday, July 2, 2011

tittle is urs

உன்னை நினைத்து 
சந்தோஷமான கவிதை எழுத ஆசை தான் ..
இருந்தும் மனம் தடுக்கிறது..
எங்கே பிறரது கண்கள் உன் மீது பட்டு விடுமோ என்ற பயத்தால் ...

Friday, July 1, 2011

tittle is urs

இமை திறந்து இருக்கும் பொது அருகில் இல்லாத நீ 
இமை மூடிய பொது அருகில் இருந்தாய் ..
அணைக்கும் போது நகர்ந்த நீ..
என் கல்லறையை கட்டி அழுகிறாய் ..
என் செய்ய  உன்னை போல் நகர தெரியவில்லை என்னால் !!!

Thursday, June 30, 2011

tittle is urs

உன்னை நினைக்கும் போது என் நெஞ்சில் எதோ பரவசம்...
ஆனால் உன்னை பார்த்ததும் எதோ மனம் குளிர்ந்து என்ன அதிசயம்.
என் முகத்தில் எதோ கொஞ்சம் அச்சம் 
என் சிரிப்பிலும் வைத்தேன் அதை  மிச்சம் .. 

Wednesday, June 29, 2011

tittle is yours

என் உறங்கிய கண்களுக்குள்ளும் 
விழித்திருக்கிறது 
உன் நினைவுகள் ..

Tuesday, June 28, 2011

tittle is urs

என் கை பிடித்து அழைத்து செல்வாய் என நினைத்தேன் ..
என் கைகளை பூ தூவ வைத்து விட்டாயே உன் மணமேடைக்கு 

Saturday, June 25, 2011

tittle is urs

ஏ பெண்ணே உன்னை பார்க்கும் வரை எனக்கானவள் யார் என்று தேடிகொண்டிருந்தேன் 
உன்னை பார்த்த பின் நான் எங்கே சென்றேன் என்று தேடி கொண்டிருக்கிறேன் ...
ஏனெனில் நான் தொலைத்த என்   இதயத்தை எடுத்துக்கொண்டு நீ எங்கே போய்விட்டாய் ... கொடுத்து விட்டு போ 

Friday, June 24, 2011

tittle is urs

என் சந்தோஷமான தருணங்களில் என்னால் வாய் விட்டு சிரிக்கமுடியவில்லை 
நீ என் அருகில் இல்லாததால் ..
என் சோகமான தருணத்தில் என்னால் அழமுடியவில்லை நீ என் கண்களை பார்த்துகொண்டு அருகில் இருந்ததால்

Wednesday, June 22, 2011

tittle is urs

உன் அன்பை  பிறர் மதிக்கவில்லை என்று கவலை படாதே..
மாறாக அவர்களை நீ கண்டுகொள்ளாமல் விட்டுவிடு.
அது தான் நீ அவர்களுக்கு கொடுக்கும்  சரியான தண்டனை .

Tuesday, June 21, 2011

tittle is urs

நீ என்னை நினைக்கும் போது பட்டாம்பூச்சியாய் 
என் மனம் சிறகடித்து பறக்கிறது.
நீ என் மீது கோபம் கொண்டதும் 
என் மனம் பாரம் தாங்கிய தராசாய் கிழே சரிந்துவிடுகிறது .


Monday, June 20, 2011

tittle is urs

ஊர் முழுவதும் தேடி அலைகிறார்கள் கடவுளை ..
நன் கண்டேன் அதை உன் அன்பெனும் கடலில் ...

Saturday, June 18, 2011

tittle is urs

உன்னை பிரிய மனம் இன்றி நீ சென்ற பாதையிலே பின் தொடர்ந்து வந்தேன் 
உன் நிழலை பிடித்துகொண்டு 
அது கடலில் சென்று மறைந்ததை கண்டு தான் புரிந்துகொண்டேன்  நீ 
சூரியன் என்று .

Friday, June 17, 2011

tittle is urs

சோர்வடைந்த என் இதயத்தால் இதற்குமேலும் துடிக்கமுடியாது 
என்ற நிலை வந்தும் என் இதயம் துடிப்பை நிறுத்தவில்லை 
ஏன் தெரியுமா ? 
அதற்குள் உறங்கிகொண்டிருக்கும்  உன்னை எழுப்பி விட மனம் இல்லாததால்  

Thursday, June 16, 2011

tittle is urs

வெட்டிய ஆலமரம் தனியே தரையில் விழலாம் 
ஆனால் அதன் வேரை தனியே பிரிக்கமுடிவதில்லை
அதுபோலத்தான் நானும்- ஏற்படும் காயங்கள் என்னை பூமியில் தள்ளலாம் 
ஆனால் ஒருபோதும் உன் நினைவுகள் என் மனதை விட்டு 
பிரிக்க இடம் கொடுத்ததில்லை

Wednesday, June 1, 2011

tittle is urs

உணர்வுகளின் வெளிப்பாடுகள் கட்டுபடுத்த படலாம்
ஆனால் உணர்வுகள் எல்லோருக்குள்ளும் ஒரே மாதிரித்தான் 
அணை திறந்த வெள்ளமாய் ஓடிகொண்டிருகிறது...
அனைவருமே மகாத்மா காந்தி ஆகிவிடமுடியாது ...
அப்படி ஆகிவிட்டால்?... மகாத்மா வாக அவர் இருந்து இருப்பாரா


Tuesday, May 31, 2011

tittle is urs

அன்று நான் சொன்ன பொய்யை எல்லாம் 
.உண்மை என நம்பினாய் 
இன்று நான் உண்மையை தான் சொல்கிறேன் 
ஆனால் அதை நீ நம்ப மறுக்கிறாய் ..
நான் உனக்கு பொருத்தமானவன் (or பொருத்தமானவள் ) இல்லை என்று ..

Sunday, May 29, 2011

tittle is urs

அதிகமான நண்பர்களை பெறுவதால் 
ஒருவரின் குணத்தை குறைகூரதே 
நி மிகுந்த  நல்ல  குணத்தை கொண்டிருந்தால் மட்டுமே உன்னை
சுற்றி நண்பர்கள் இருப்பார்கள்  
உப்பை சுற்றி எறும்புகள் மொய்பதில்லை நினைவில்கொல்

Tuesday, May 24, 2011

tittle is urs

ஒரு பொய் நம் உயிரை காப்பற்றலாம் ..
ஆனால் நம்மை நம்பியவரின் இதயத்தை உடைபதாக இருக்கலாமா ..
ஒரு உண்மை நம் உயிரை எடுக்கலாம் ஆனால் 
உன்னை நேசித்தவரின் உயிரையும் கொண்டுவரும் நீ போகும் இடம்தேடி 

Tuesday, May 17, 2011

tittle is urs

வாழ்கை எனும் பாடத்தை படிக்க நாம்  இன்று மாணவர்களாக  சேர்ந்தால் மட்டுமே 
நாம் நாளை இங்கு ஆசிரியர்களாக மாற முடியும் வரும் சந்ததியினர்க்கு ..




Saturday, May 14, 2011

tittle is urs

நான் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பது மட்டும் 
என் நோக்கம் அல்ல 
உன் சிரித்தமுகத்தை முகத்தை பார்த்து சந்தோஷபடுவதே என் நோக்கம் 

நான் வயிறார உணவு உண்ணவேண்டும் என்பது 
என் நோக்கமல்ல 
உனக்கு அதில் பாதி கொடுத்து உன் வயிறும் நிரப்புவதே என் நோக்கம் 



Tuesday, May 10, 2011

tittle is urs

நான் அருகில் இருக்கும் போதெல்லாம் விலகி செல்ல தெரிந்த உனக்கு 
நான் விலகி செல்லும்  பொது விலகி செல்ல தெரியவில்லையா 
நெருங்கி வராதே நான் உடைந்து இருக்கிறேன் ... உனக்கு காயம் பட்டுவிடும் இந்த உடைந்த பகுதிகளில்  உன் விரல் பட்டாலும் ..

Saturday, May 7, 2011

tittle is urs

\ஆசையெல்லாம் சேர்த்து வைத்தேன்
ஒரு நாள் உன் தோள் சாய்ந்து உன்னோடு பகிர்ந்துகொள்ள
என் ஆசைகள் எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன .. மாறாமல்
ஆனால் இன்று உன் தோளில் வேறு யாரோ ...

Friday, May 6, 2011

tittle is urs

புத்தகம் படித்தால் புத்தியை கூர்மையாக்கலாம்
இதயத்தை படித்தால் நீ இமயத்தையே சாய்துவிடலாம்


Thursday, May 5, 2011

tittle is urs

அன்பு என்ற ஒன்று இல்லை என்றால் வாழ்கைக்கு அர்த்தம் கிடையாது..
நண்பன் என்ற நீ இல்லை என்றால் என் வழக்கை முழுமை அடையாது .

Tuesday, May 3, 2011

tittle is urs

உன் கண்களில் கண்ணீர் வரும் போது அதை துடைக்க என் விரல்கள் வருமா என்று எனக்கு தெரியாது....
ஆனால்  நான் இருக்கும் வரை உன் கண்கள் கண்ணீரால் நிரம்பாது ..

Saturday, April 30, 2011

tittle is urs

என் இதயம் கல் தான் ..
நீ இல்லை இருந்தும் அது இயங்கி கொண்டிருகிறது அதனால்

Friday, April 29, 2011

tittle is urs

புதிது புதிதாக மலர்கள் பூத்தன என் வீட்டு  தோட்டத்தில் மட்டும் அல்ல
என் இதயத்திலும் நட்பு என்னும் பூ ....

Thursday, April 28, 2011

tittle is urs

நீ சிங்கமாய் வாழ்ந்தாலும் ..
மானாய் ஓடினாலும்..
மயிலாய் ஆடினாலும் ..
மனிதனாக தான் சாவை இறுதியில்
ஆகையால் அனைவரையும் நேசி 

Wednesday, April 27, 2011

tittle is urs

என் இதயம் வலிக்கும் போதெல்லாம் நான்
உன்னை நினைத்துக்கொள்கிறேன் ..
ஒரு காலத்தில் நீ அங்கு தங்கி இருந்ததை 
இன்னும் என் மனம் மறக்காமல் நினைத்து துடிக்கிறது  ..
ஆனால் நான்  மறந்தது போல் வெளியே  நடித்து கொண்டிருக்கிறேன்

Tuesday, April 26, 2011

tittle is urs

நீ சொல்லும் அணைத்து பொய்யையும் நான் ரசிக்கிறேன் 
அதை நீ உண்மையை போலவே சமாளிக்கும் வரை ...

Monday, April 25, 2011

tittle is urs

எத்தனை பெரிய துன்பம் நம்மை  வந்து அடைந்தாலும்
நம்மை அதிலிருந்து காப்பாற்ற ஒரு மனிதன் நமக்காக படைக்க பட்டு இருக்கிறான் 
என்ற நம்பிக்கையை  நமக்கு  தருவது 
நம்முடைய நண்பன் நம்  துன்ப நேரங்களில் நம் அருகில் இருக்கும் போது மட்டுமே ... 
எனக்காக படைக்கப்பட்ட உனக்கு என்னுடைய நன்றி 

Saturday, April 23, 2011

tittle is urs

என் சுவாச குழலுக்குள் சென்ற காற்று கூட அடுத்த நொடி 
உன்னை சேர வெளியே வந்து காற்றுடன் கலந்து  விடுகிறது

Friday, April 22, 2011

tittle is urs

உன் விழி இப்போது  என்னை பார்க்கும் தூரத்தில் இல்லை 
இருந்தும் நான் கவலை பட வில்லை..
ஏனெனில் நீ அன்று பார்த்த பார்வையே அடிமனதில் பதித்து விட்ட காரணத்தால்

Thursday, April 21, 2011

tittle is urs

என் மொழிநடையில்(grammar ) என்ன பிழை வேண்டுமானாலும் வரலாம்
ஆனால் என் நடையில் பிழை வராது..
ஏன் என்றால் நீ போகும்  பாதையை தேடி தான் அது வந்துகொண்டிருகிறது ..

Wednesday, April 20, 2011

tittle is urs

உன் பாசத்தை வானில் வரும் மேகங்களில் தூது   அனுப்பிவிடு
மழையில் நனைந்து என்னை நான்  குளிர்வித்துக்கொள்கிறேன்
ஏனென்றால் உன் கோவ தீயில் சிக்கிதவிபத்தால்...

Tuesday, April 19, 2011

tittle is urs

உன் கேள்விகளுக்கு இன்று பதில் சொல்லமுடியாமல் திணறுகிறேன் ..
அன்று நீ இப்படி பேசி இருந்தால்
நான் இன்று இப்படி நின்றுகொண்டிருக்கமாட்டேன்
(இன்றைய ஆண்களில் feeling  when  their 
 wife  talk )

tittle is urs

நம்முடைய மௌனத்தால் ஆயிரம்  பிரச்சனைக்கு  தீர்வு காணமுடியும் ..
நிச்சயமாக
நம்முடைய மௌனத்தால் நம்மை  நேசித்த உயிருக்கு ஏற்படும் வலிக்கு
தீர்வை தரமுடியாது ..
நேசித்தவரின் முன் மௌனத்தை கலையுங்கள் ..

Monday, April 18, 2011

tittle is urs

பூவை நெருங்கியதும் சிலிர்த்தது பட்டாம்பூச்சு ,,
உன்னை நினைத்ததும் நிகழ்ந்தது  எனக்குள்ளும்  இப்படி ஒரு மாற்றம் ...

Sunday, April 17, 2011

tittle is urs

நிலத்தில் பூகம்பம் கடலில் சுனாமி
இதயத்தில் வலி கண்களில் கண்ணீர்
எதனால் ,,
நியாயம் அழிகிறதே என்று நிலம் துடித்ததால் பூகம்பம்..
நீ இல்லாத இதயம் இருந்ததால் வலி

Friday, April 15, 2011

tittle is urs

என்னை நாள் முழுவதும் பேசிகொண்டிருக்க சொன்னாலும் பேசிக்கொண்டே இருப்பேன்..
என்னை நாள் முழுவதும் மௌனமாக இருக்க சொன்னாலும்
மௌனமாக இருப்பேன் ..
ஆனால் உன்னை நினைக்காமல் இருக்க சொன்னால் அடுத்த நிமிடம் நான் சாகமாட்டேன் ... உன்னை நினைக்ககூடாது என்று சொன்னவர்களை இந்த  உலகத்தை விட்டு அனுப்பிவிட்டு உன்னை நினைக்க தொடங்கிவிடுவேன்

tittle is urs

உன் இதழோர புன்னகையை கண்டு ரசித்துக்கொண்டு இருந்த
என்  விழிகளில் ஓரம் கண்ணீர் ...
உன்னை மறுபடி எப்போது  பார்ப்பேனோ என்று விழிகள் அறியாமலே கண்ணீரும் வந்து உன்னை கண்டது அந்த நிமிடம்

Thursday, April 14, 2011

tittle is urs

என் மனம் எதையோ உன்னிடம் சொல்ல நினைத்து தவிக்கிறது ,,,
தினம் தினம் அது  சொல்ல துடிக்கும்  வார்த்தைகளை உன்னிடம் சேர்க்க நான்  உன்னைத்தேடி அலைகிறேன் ... முகம் தெரியாத அந்த இதயம் யாருடையது என்று

Monday, April 11, 2011

tittle is urs

என்னை இந்த உலகிற்கு கொடுத்த உன்னையும்(என் அம்மாவையும் ) ...
என்னுடைய வாழ்கைக்கு ஒரு நண்பன் தேவை என்பதை உணர்ந்து உன்னை இந்த உலகிற்கு கொடுத்த என் நண்பனின்  தாயையும் ( உன் அம்மாவையும் )  தவிர என் உதடு ஒருவரையும் அம்மா என்று அழைக்காது.
எனக்கு அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும் எனபதால் மட்டும் அல்ல இந்த உலகத்தில் தன்னுடைய தாயை முழுமையாக நேசித்த எந்த மகனும் மகளும் தன்னுடைய பெற்றோருக்கு செய்யும்  நன்றி அது மற்றும்  தான்..

Saturday, April 9, 2011

tittle is urs

ஆபத்து இல்லாத அழகி அவள் ..
என் கண்களுக்கு மட்டும் அழகாக தெரிவதால்.

Friday, April 8, 2011

tittle is urs

எத்தனை பேர் நம்மை சுற்றி நம்மை காயபடுதுகிறார்கள்  என்று யோசிப்பதை விட
உன்னுடைய நலனை விரும்பும் ஒருவர் உன்னை சுற்றி இருந்தால் போதும்  காயமும் வெங்காயமாக மாறும் ( வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாமல் போகும்)
உன்னுடன் நான் இருக்கும் வரை உனக்கு கவலை ஏன்...

Wednesday, April 6, 2011

tittle is urs

பட்டு சேலை கட்டி வந்தால் என் சுந்தரி..
அவள் கட்டிய சேலைக்கு முன்னரே கசங்கியது என் நெஞ்சடி (இதயம்) 
ஒற்றை வார்த்தை என்னை பார்த்து சொல்லடி  ...
உன் பாதம் பட காத்துக்கிடக்குது என் வீட்டு வாசலடி

tittle is urs

வெளிறிய என் கண்களில் எரிமலை வெடித்தது நீ என்னை விட்டு விலகி சென்றபோது ...
இருத்தும் என்ன வேதியல் மாற்றம் நடந்ததோ என் சிவந்த கண்களுக்குள் தெரியவில்லை .. வெளியே வந்த கண்ணீர் மட்டும் வெள்ளை நிறத்தில் வந்தது ...

Tuesday, April 5, 2011

tittle is urs

எல்லோரும் நீ பேசும் மொழியை ரசித்து கேட்டு கொண்டிருகிறார்கள்
ஆனால் நான் உன் பேச்சின் நடுவில் நீ எடுத்துக்கொண்ட  மௌனத்தை மட்டும் ரசித்து கொண்டு இருக்கிறேன் ...
அந்த மௌனம் நீ என்னை பார்க்கும் போது வந்தது என்பதால் ...
நீ என்னை தொலைவில் இருந்தும் அணைக்கிறாய் ..
நான் உன் அருகில் இருந்தும் உன்னை இழக்கிறேன் .

Monday, April 4, 2011

tittle is urs

நீ என்  அருகில்  இல்லாத போதும் நானே என் கண்களை மூடிகொள்கிறேன்
உன்னை நினைக்கும் பொது வெட்கத்தால்

tittle is urs

தொட முடியாத தூரத்தில் நீ இருந்தாலும் ...
என் ஒவ்வொரு இதய துடிப்பின் நேரத்திலும்
உன் நினைவுகள்
என் மனதை தொட்டு கொண்டு தான் இருக்கிறது

Sunday, April 3, 2011

tittle is urs

முத்துக்கள் எப்போதும்  வெண்மையாக தான் இருக்குமாம் .
ஆனால் என்னிடம்  மட்டும் கலர் கலர்  முத்துக்கள் இருக்கிறது ...
என் நண்பர்களை தான் சொல்கிறேன்
அவர்கள் முத்துக்கள் மட்டும் அல்ல
என் வாழ்கையில் நான் சேர்த்து வாய்த்த சொத்துக்கள் கூட

Friday, April 1, 2011

tittle is urs

நாம் பிறந்த நாட்டை நாம் மதிக்காமல் போனால்
அண்டை நாட்டில் இருக்கும் நாய் கூட உன்னை மிதித்துவிட்டு போகும்..
ஜாக்கிரதை ...

tittle is urs

உன் தோளில் நான் சாய்ந்து..
உன் கண்கள் தான் பார்த்து..
போகின்ற நிமிடங்கள் சுகமே..
அதை நினைத்து தான் எங்கும் நம் மனமே..

Thursday, March 31, 2011

tittle is urs

நீ வந்த பின் என் சோகங்கள் போகும் என்று நினைத்தேன் ..
நீ வந்தபின் உன் பிரிவு  எனக்கு சோகமாக மாறிவிட்டது ..

Tuesday, March 29, 2011

tittle is urs

உன் விழி ஓர கண்ணீர் துடைக்க  என் விரல்கள் தேவைப்படலாம் ,
ஆனால் என் விழி கண்ணீர் துடைக்க உன் நினைவுகளே போதுமானது ...

Monday, March 28, 2011

tittle is urs

நான் யாரை பார்த்தும் பொறமை பட விரும்பியதில்லை  என்னெனில் உன்னை போல் ஒரு சிறந்த இதயம் என்னிடம் இருப்பதால்
சில நேரங்களில் பொறமை படுகிறேன் உன்னிடம் உரிமை கொண்டாடும் சிலரை பார்த்து ... நான் தியாகி அல்ல உன்னை விட்டுகொடுக்க ....:-)

tittle is urs

உன் முக பாவத்தை கொண்டு உன்னை எத்தனை பேர்வேண்டுமனாலும் புரிந்து கொள்ளட்டும் ...
ஆனால் உன் மனதின் மௌனத்தினை நான்  மட்டும் புரிந்துகொள்ளும் அன்பை மட்டும் எனக்கு கொடு

Friday, March 25, 2011

tittle is urs

என்னை விட்டு போறவளே ..
திரும்பித்தான் கொஞ்சம் பாரேன் புள்ள..
உனக்கு என்ன பிடிக்கலன்னு சொல்லியாச்சும் போனா என்ன
அந்த நிமிடம் கூட என் மனசு உன்ன வேருக்குமானு  தெரியலியே


Wednesday, March 23, 2011

tittle is urs

நீ சோகமாக இருக்கும் போது என்னிடம் பேசு
நிச்சயம் உன்னை சிரித்த முகத்தோடு தான் திரும்ப  அனுப்புவேன் ..
சந்தோஷமாக இருக்கும் போது வராதே ஒரு வேலை உன்னை அழவைத்து விடுவேனோ என்ற பயம் தான்

tittle is urs

உன்னை நினைக்காத நாளில்லை ..
உன்னை நினைக்காமல் நானும் இல்லை..
உனக்கருகே நான் பேசியதுமில்லை
ஆனால் உன்னோடு பேசாமல் இருந்ததும் இல்லை ...
உன் மனதிடம் கேட்டு பார் அது சொல்லும்  என் நிலைமை

Tuesday, March 22, 2011

tittle is urs

நான் பிறந்த நேரம் நல்ல  நேரமா என்று எனக்கு தெரியாது
ஆனால் "நீ பிறந்த நேரம்" எனக்கு நல்ல நேரம் தான் ...
என் சோதனைகளை சாதனைகளாக  மாற்ற
இந்த உலகத்தில் ஒரு ஜீவன்... நீ வந்த நேரம் உலகத்தில் பொன்நேரமே எனக்கு

tittle is urs

இந்த உலகத்தில் பணம் கொடுத்து வாங்கும் ஏதும் நிலைப்பதில்லை
உதாரணம்: அரசியல் செல்வாக்கு .
இந்த உலகில் மனதை கொடுத்து வாங்கும் எதுவும் அழிவதில்லை
உதாரணம் :     நட்பு

Monday, March 21, 2011

tittle is urs

தர்பூசணியை அறுக்கும் போது நான் ஒன்று கற்றுக்கொண்டேன் ...
தர்பூசணி மட்டும் அல்ல நான் கூட இனிமையான உன்னை 
என்னிடம்  இருந்து
காலம்  பிரித்து எடுக்கும் போது
இப்படி தான் கண்ணீர் விடு அழுவேன் என்று ...

tittle is urs

பூச்செடிக்கு  கூட தண்ணீர் ஊற்றியவளல்ல நான் ..
தினமும்..

என் இதயத்தில் வளரும் உன் நினைவுக்கு எனக்கே தெரியாமல் என் கண்கள்  கண்ணீர் ஊற்றி வளர்கிறது 

Saturday, March 19, 2011

tittle is urs

காற்று என் மீது மோதும் பொது நான் அமைதியாக ரசிக்கிறேன் ..
காற்று நின்றதும் நான் பறக்கிறேன் உன்னை நினைத்து கனவில் ...

Friday, March 18, 2011

tittle is urs

ஒரு ஆணின் கவலை வரிகள்..



உன்னை நேசித்த குற்றத்திற்காக நான் எனக்கு தரும் தண்டனை தான் இந்த புகை பழக்கம் ..
உன் நினைவுகள் என் இதயத்தை எரிக்கிறது ..
இந்த புகை என் சிறுநீரகத்தை எரிக்கிறது ...
இரண்டுமே நான் நேசித்தவை என்பதால் அதை கண்டிக்க என்னால் முடியவில்லை


tittle is urs

நாம் வாழ்கை பாதையில் யார் யாரையோ தொலைத்து விட்டு அழுகிறோம் ...


நாம் ஒரு நாள் நம்மையே தொலைக்க போகிறோம் என்று தெரியாமல் ..

கண்களை துடைத்துக்கொண்டு நடந்து பார் உன் மரணம் கூட உன்னை அழைத்துக்கொள்ள பயப்படும்..

Monday, March 14, 2011

tittle is urs

காற்றுள்ள நாள் மட்டும் என் நினைவு அதன் துணை கொண்டு உன்னையே சுற்றி வரும் ... வாழ்நாள் முழுதும்.

Wednesday, March 9, 2011

tittle is urs

பிடித்ததை எல்லாம் சொல்ல தெரிந்த எனக்கு ..
உன்னை பிடிக்கும் என்று சொல்ல தைரியம் வரவில்லையே ..
என் உதடுகளை மூடி மௌனமாக  இருக்கிறேன் ... 

tittle is urs

நம்முடைய கை அளவு பணம்யிருந்தால் நம் கதை top 
நம்மை  விட அதிகம் பணம் இருந்தாய் நம் கதை flop  ....

Tuesday, March 8, 2011

tittle is urs

உன் முகத்தை பார்த்து உன்னோடு இருபவரெல்லாம் நண்பர் இல்லை.
உன் மனதை பார்த்து ஒருவராவது உன்னோடு இருப்பாரென்றால் அவர் மட்டுமே உனக்கு நண்பன் ...
உன் வாழ்நாளுக்கு கடவுள் கொடுத்த அன்பன்.

tittle is urs

உன் கண்கள் நான் பார்த்து..
வெட்கத்தில் நான் பூத்து...
என்  தோல் மீது கை போடும் உன் கரங்கள் ...
எப்பொதும் கடவுள் அளிக்க வேண்டும் இப்படி பட்ட வரங்கள் ...



tittle is urs

காற்றாக நீ மாறி ..
என் மீது நீ மோதி
சுவாசத்தில் கலந்த என் உயிரே
என்னை ஏன் மாற்றினாய் அது உன் தவறே ...

இளவேனிற் காலத்தில் குளிராக இருப்பது போல் இதமாக வைத்து இருந்த இதயம் ..
இன்று இடி மின்னல் தாக்கிய பின் சோர்வாக இருப்பது போல் பருவத்தை மாற்றியது உன் நினைவும் ..

Monday, March 7, 2011

tittle is urs

உன் அன்பை நேரில்  பெற உன் தாய் பத்து மாதம் தான் காத்திருந்து இருப்பாள்
ஆனால்  நான் 27  வருடம் காத்திருந்தேனே ...
இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பனே

Sunday, March 6, 2011

tittle is urs

உன் விழிகளுக்குள் தூங்க ஆசை
அப்போது  தான் உன் இமைகள் எனும் விரல்களால் என்னை தட்டிகொடுத்து துங்க வைப்பாய் என்பதால் ...

tittle is urs

fevi quick  இல்லாமல் ,
புதியதாக ஒட்ட வைத்து உருவாக்கிய  ஒரு உறவு
நம்முடைய இருவரின் இதயத்தால் உருவாக்கிய  நட்பு என்னும் உறவு தான்
  

tittle is urs

நீ சற்று என்னை நிமிர்ந்து பார்த்ததும்  
சிலிர்த்து விடடுகிறது  என் உடல் ..
உன் கண்களுக்குள்ளும் கைகள் முளைத்து விட்டதோ ...





Add caption

tittle is urs

என் கண்கள் செய்த தவறால் நான் உன்னை நேசித்து அழுகிறேன்..
ஆனால் என் நண்பர்கள்  என்ன செய்தார்கள்  அவர்கள் இருக்கும் என் இதயத்தை நீ ஒடிக்க

Saturday, March 5, 2011

tittle is urs

எனக்கு உன் மீது கோபம் வரும் போதெல்லாம் என் இதயத்தை தூக்கி வெளியே வைத்து விடுகிறேன் ..


நீ அதற்குள் இருந்த காரணத்தால் ...

ஆனால் கோபம் போனதும் பத்திரமாக இதயத்தை எடுத்து என்னுள் வைத்து கொள்கிறேன் யாராவது உன்னை தூக்கி சென்று விடுவார்கள் என்ற பயத்தால்

Friday, March 4, 2011

tittle is urs

என் விரல்கள் ஆசையாய் உன்னை தொடவரும் நேரத்தில் ..
நீ காணமல் (உடைந்து)  போனாயே நீர் குமிழியாய் என் முன்னே

tittle is urs

நான் நானாக இருக்கும் வரை வாழ்கையில் பிரச்சனை இல்லை..
மற்றவர்க்காக மாறும் போது தான் பிரச்சனை ஆரம்பம் ,,
இருந்தாலும் நான் யாரையும்  நேசிக்க மறுப்பதில்லை ..
காரணம் ... ஒருவருக்காக மாறும் போது தான் நாம் யார் என்பதும் நம்முடைய மனதின் வலிமை என்ன என்பதும் வெளிப்படும் ...
என் இதயத்தை சக்தி வாய்ந்ததாக  மாற்ற நான் சிறிது களம் உனக்ககும் வாழ்ந்து பார்க்கிறேனே !!

tittle is urs

சுடர் விடும் சோலை ..
பூக்களால் மாலை ..
மனம் வீசுமே நாளை ..
இங்கு என் கவிதையில் உன்னக்கென்ன வேலை ?..
என் நினைவில் இருந்த நீ வரிகளாகவும் மாறிவிட்டாய் ..
என் கவிதை அழகை தெரிகிறது உனக்காக எழுதியதால் தானோ

Thursday, March 3, 2011

tittle is urs

நான் உன்னை விட்டு விலகி போனபோதெல்லாம் நீ என்னருகில் வந்தாய்...


இன்று நான் உன் அருகில் நீ இன்று இல்லை என் அருகில்

Saturday, February 26, 2011

tittle is urs

சுட்டும் விழி பார்வை எதற்கு
சுடாமலே கிடைத்தாய் நீ  எனக்கு...
வட்டம் போடும்  நடை எதற்கு ...
ஆட்டம் போடா வைக்கும் உன் பேச்சோ சரக்கு ....
கவிதை தான் எழுத நினைத்தது என் மனம்...
தடை போட நினைக்கிறதே  மனதில் ஏற்பட ரணம் (pain )...



Friday, February 25, 2011

tittle is urs

கோடி ருபாய் கொடுத்தாலும் வாங்க முடியாத என் மனதை ..


எப்படி வாங்கினாய் உன் ஒரே ஒரு புன்னகையால் ..

என்னிடம் இருந்து .,...

Thursday, February 24, 2011

tittle is urs

எனக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம் ...


என்று உன் மனதில் எனக்கு இடம் இல்லாத போது...

Tuesday, February 22, 2011

tittle is urs

கவிதை பூ எடுத்து நான் உனக்கு சூடுகிறேன். .


அருகில் நீ இருந்தும் உன்னை எங்கோ தேடுகிறேன் ..

காற்றில் உன் கூந்தல் மேகம் போல் என்னை சூழ ...

கனவில் உன் நினைவு போர்வையை என்னை மூட ..

காணமல் போகிறேன் விடியும் வரை உன்னோடு (நினைவோடு) இருந்து..

புன்னகைப்பேன் எபோதும் உன் நினைவில் நான் மிததந்து ..

எனக்காய் உயிர் எடுத்தாய் நீ..

இனி உனக்காய் நான் ஆனேனடி ..

Monday, February 21, 2011

tittle is urs

நாம் ஒருவரின் பாசத்தையும் ..

அவர்களின் குணத்தையும்..

சரியாக தெரிந்து கொண்டு கையாலமுடியாத (namma language la carfull ah handle panathapothu) போது

நாம் அவர்களை மட்டும் அல்ல அவர்களின் பாசத்தையும் இழக்க நேரிடும் ,,,,

ஒரு வரை சரியாக புரிந்து கொள்ளாத வரை அவர்களை கட்டாயபடுத்துவதை ...

நாம் கட்டாயமாக தவிர்ப்பது நல்லது ....

Sunday, February 20, 2011

tittle is urs

என் கண்களுக்குள் உன்னை வைத்திருப்பதால்  என்னவோ ...




நீ தினமும் குளிக்க என்னை அழவைகிறாய் ....

Saturday, February 19, 2011

tittle is urs

நீ பேசாமலே புரிந்து கொள்ள நான் இருக்கிறேன் ..


ஆனால்,,,

நான் பேசினாலும் புரிந்துகொள்ள இங்கு யாரும் இல்லையே !!

Friday, February 18, 2011

tittle is urs

என் கண்களில் இருந்து வரும் கண்ணீர் கூட இனிக்கிறது

உன்னை நினைத்து அழுவதால் .....

Thursday, February 17, 2011

tittle is urs

நீ நேசித்த ஒன்று வேண்டுமானால் ஒரு நாள் உன்னை விட்டு போய்விடலாம் ஆனால்


நிச்சயமாக உன்னை நேசித்த ஒரு இதயம் உன்னை விட்டு போகாது ......



மற்றவர் நம்மை நேசிக்கும் அளவுக்கு நடந்து கொள்வோம் இன்றில்இருந்தாவது ....

Wednesday, February 16, 2011

tittle is urs

நீ நேசித்தவரின் உடல் வேண்டுமென்றால் உன்னை விட்டு பிரியலாம் ஆனால்


அவர்களின் உயிர் உன்னை சுற்றிதான் இருக்கும் ....

உடலுக்கு வேறு யார் வேண்டுமானாலும் கிடைக்கலாம் ...

உன் பாசம் மட்டும் தான் அந்த உள்ளத்துக்கு நிறந்தரம்...



முழுவதுமாக உன் பாசத்தை கொடுத்து நேசி ...

உன்னை சுற்றி ஒரு உயிர் இருக்கும் இது உறுதி .

Sunday, February 13, 2011

tittle is urs

உன் அழகை பார்த்து மயங்கி போனதை விட
உன் அன்பை பார்த்து வியந்து போகிறேன் ...
உன்னை நினைக்கும் போதெல்லாம் ....:-)

tittle is urs

எத்தனை கோடி மொழி இருப்பினும்
என் தமிழுக்கு இணை ஆகாது ...
எத்தனை கோடி மனிதர் இருப்பினும்
என் நண்பர்களுக்கு இணை ஆகாது

tittle is urs

நான் தொட முடியாத உன் நெஞ்சத்தை
என் வார்த்தைகளாவது தொடட்டுமே !!
நீ இதை படிக்கும் நிமிடங்களில்

tittle is urs

 நான் என் இதயத்தில் உன்னை செதுக்கிவைகவில்லை,
உனக்கு வலிக்கும் என்று ..
நான் என்னையே சிதைத்து உன்னுள் கலந்து விட்டேன் ,
நம் நட்பின் பலம் கூடவேண்டும் என்று ..

tittle is urs

என் உடல் அழிந்து போனாலும் போகும்
என் மனம் அழிந்து போகாது .

என் நிழல் அழிந்து போனாலும் போகும்
என் மனதில் உள்ள உன் நினைவு அழிந்து போகாது .

tittle is urs

நீ என்றாவது சொல்லும் செல்லமான வார்த்தைக்காக

நான் என்னை செல்லரிக்கும் வரை காத்து இருப்பேன் ..

tittle is urs

உன்னுடைய கவலைகளை கண்களில் வை
உன்னுடைய சந்தோஷத்தை இதயத்தில் வை
ஒரு நாள் அழுதால் போதும் கவலைகள் கண்ணீரில் கலந்து போய்விடும் .

இதயத்தில் வைத்தால் அது அப்படியே நிலைத்துவிடும் ...

நீ ஏன் இதயத்தில் ஏற்படுத்திய பாச தழும்பை போல .....

tittle is urs

உனக்கு என்னை  அதிகமாக பிடிக்கும் என்று எனக்கு தெரியும்
ஆனால்
அதை ஒரு முறை கூட
மனம் திறந்து சொல்லாதது ஏன்?
உன் உதடுகளை  விட
அதிகமாக உன் மௌனம் தான் என்னிடம் பேசுகிறது ..

tittle is urs

ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு பழக ஆரம்பித்தாய்  நீ
அதை கூட தெரியாமல் நம்பிவிட்டேன் நான் ...
ஏன் என்றால் எனக்கு ஏமாற்ற தெரியாதே உன்னை போல !

Saturday, February 12, 2011

tittle is urs

நானே எனது இல்லை என் உடல் என் பெற்றோர் கொடுத்தது


என் உயிர் இறைவன் கொடுத்தது ...

ஆனால் உன்னை மட்டும் நான் எனது என்பேன் ,,

ஏனென்றால் நான் கண்டுபித்த ஒரு அழகான உயிர் நீ எனக்காக இன்று என் நண்பனாக...

Wednesday, February 9, 2011

tittle is urs

நீ என்ன தான் ஓடிக்கொண்டே இருக்கும் போதும் வலிக்கவில்லை உன்னை தாங்கிய என் இதயம் ...


அனால் நீ அடுத்தவரின் இதயத்தில் ஓடி கொண்டிருக்கும் போது தான் அது அதிகமாக வலிக்கிறது ..

Friday, February 4, 2011

tittle is urs

பூவை தேடி வண்டு வரும் ..உணவுக்காக


உன்னை தேடி நான் வந்தேன் நட்புக்காக..

நண்பா கொடுத்து விடு உன் நட்பை ..

இல்லை சொல்லிவிடு குட் பாய் .

Thursday, February 3, 2011

..

உனக்கு மட்டும் தான் இதயம் சதையாலும் ரத்தத்தாலும் உருவாக்கப்பட்டது என்று நினைக்கிறாயா..

எனக்கும் அப்டிதானே உருவாகி இருக்கும் .

பின்பு ஏன் உன் மௌனம் என்னும் ஊசியால் இப்படி குத்தி காயபடுதுகிறாய் ? ஏன் இதயத்தை நீ

Sunday, January 23, 2011

tittle is urs

நான் என்றுமே தோற்றுக்கொண்டிருகிறேன்
உன் பாசத்துக்கு முன்னால்..
விரும்பியதில்லை  வெற்றிபெற ஒருபோதும்.
விரும்புகிறேன் உன் மனதின் சந்தோஷத்தை
அனுதினமும் ...

tittle is urs

கண் இருந்தும் குருடி தான் ,
உன் அழகு முகத்தை காணும் வரை.

tittle is urs

தேவையான போது மட்டும் என்னை நினைக்கும்
உன் மனதை விட ,
எப்போதுமே  உன்னை மட்டுமே நினைக்கும் என் மனதிற்கு தான்
வலி அதிகம் .
உனக்கு எப்படி புரியும் . .

tittle is urs

பேனா முனையை விட வலிமை
உன் கண்களின்  பார்வை  ,
என்னை தலை குனிய செய்கிறதே,
நி என்னை பார்க்கும் போது வெட்கத்தில் ...

Thursday, January 13, 2011

title is ur choice:-)

என் கண்கள் என்ன பாவம் செய்தது
உன் நிழலை கூட பார்க்க அனுமதி கிடைக்காமல் தவிக்கிறதே .
என் இதயம் என்ன புண்ணியம்  செய்தது .
நீ என்னை நினைக்காமல் போனாலும் உன்னையே நினைக்கும் வரத்தை பெற்றதே.

title is ur choice:-)

ஊர் முழுவதும் நல்ல நண்பனை தேடி
அலையாதே ..
உன்னுடைய நண்பர்களுக்கு நீ நல்ல நண்பனாக இரு
இந்த உலகமே உன்னை சுற்றி இருக்கும் உன்னை நண்பனாக்கி கொள்ள .

title is ur choice:-)

உனக்கு பிடிக்காத எதையும் நான்
நினைப்பதே  இல்லை ...
என்னையும் சேர்த்து.

தோல்வி=வெற்றி

நி ஒவ்வொரு முறை தோல்வியடையும்   போதும் ,
சிரித்துக்கொண்டே சொல் ...
நீ தோற்றால் அழுது விடுவாய் என்று ..
உன்னை பார்த்து சிரித்தவரிடம்.

வெற்றி என்பது எப்போதாவது  தான் வரும்.
தோல்வி எப்போதுமே  வரும்..
என்றோ வரும் வெற்றிக்காக எப்பொதுமே நம்முடன்  இருக்கும் தோல்வியை வெறுப்பது ஏன் ?

தோல்வியையே நண்பனாக்கி வெற்றி காணுவோம் ,,
வாழ்வில் சரித்திரம் படைப்போம்.

title is ur choice:-)

தினமும் காலையில் உன் முகத்தை பார்க்க முடியவில்லை என்றாலும் ,
உன்னை நினைக்காமல் என் பொழுது விடிவதே இல்லை.
தினமும் நான் உன்னுடன் பேச முடியவில்லை என்றாலும்,
நீ சொல்ல நினைத்ததை செய்யாமல் இருந்ததில்லை .
தினமும் நான் நீ செல்லும் பாதையில் வருவது இல்லை
என்றாலும்  உன் பாதையை நீ நெருங்கும் முன்பே உனக்கு முன் நானிருப்பேன்..
நீ நினைக்கும் அனைத்தையும் நான் இங்கேருந்தே செய்வேன் ...
ஏனெனில் உன் உடல் மட்டுமே  அங்கு உள்ளது உன் மனம் இங்கு என்னோடு  தானே இருக்கிறது  .

title is ur choice:-)

யார் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும்,
உன் உதடுகள் இரண்டும் ஒத்துழைக்க வில்லை என்றால் என்ன பயன் .
உன் வலிக்கு நீ மட்டும் தான் அழமுடியும்  உன் கண்களால் ,,
உன் மீது பாசம் வைத்தவரால்  மட்டுமே அதையும்  உணரமுடியும் ,

Tuesday, January 11, 2011

title is ur choice:-)

உனக்காக உன் இதயம் மட்டும் அல்ல
நானும் துடித்து கொண்டு தான்
இருகிறேன் இங்கே..
       உன் இதயத்தின் ஓசையை
முக்கியமாக கருதும் நீ..
ஏன் நான் பேசும் ஓசையை
கேட்க மறுக்கிறாய் ?

உன் இதயத்துக்கு மட்டும் தான்
உரிமை உள்ளதா உன்னோடு பேச

உன் நண்பன்

உலகில் மற்றவரை நாம் நண்பர்களாக்கி
கொள்வதற்கு முன்பு
நம் மனதை நண்பனாக்கி  கொண்டால்
நாம் என்றுமே தனிமை படுத்தபடுவது  இல்லை ...

title is ur choice:-)

கவிதை என்பது யோசித்து வருவது அல்ல
அன்பான ஓயருவரை நினைக்கும் போது
இல்லக்கணம் தெரியாதா ஒருவனும்
எழுதும் அழகான வரிகள் தான் ...

அப்படி நான்  கண்ட  உனக்கு
இந்த அழகான வரிகளை  அன்பாக
சமர்பிக்கிறேன் கவிதையாக ஏற்றுக்கொள்வாயா!

title is ur choice:-)

நான் எவ்வளவு உயரத்தில் சென்றாலும்
நீ ஒரு முறை என்னை நினைத்தால்
அடுத்த நிமிடம் உன் முன் இருப்பேன் ...
நீ மண்ணோடு  கலந்து இருந்தாலும்
உன்னோடு கலந்திடுவேன்

மன்னிப்பு

ஓவ்வொரு  நொடியும் உன்னை   பார்க்க ஏங்குகிறேன் , இப்போது
ஏன் ? நீ அப்போது  கேட்டபோது மறுத்த காரணத்தாலோ

திரும்ப ஒரு முறை உன்னை சந்திக்கும்
நேரம் கிடைத்தால் போதும் எனக்கு
கலந்து உரையாட அல்ல
உன்னிடம் மன்னிப்பு கேட்க ...

ஒரு தலை காதல்

குளத்தில்   தான்  தாமரை இருக்கிறது
ஆனால் தண்ணீருக்கும் தாமரைக்கும் தொடர்பு இல்லாதது போல்
நீயும் உன் நினைவும் என்னோடு இருந்தும் ..
நீ மட்டும் படும் படாமலும் இருபது ஏன்...

நீ என்ன தாமரையா
தன்னை தாங்கும் நீரும் ஒட்டவிடாமல் செய்ய

title is ur choice:-)

ஓடுகின்ற நதியே நீ எங்கே போகின்றாய்
பாடுன்கிற மனதே நீ யாரை தேடுகின்றாய்
அசைகின்ற காற்றே நீ யாரிடம் சேர்கின்றாய்

உன்னை நினைக்கும் மனது இங்கு உள்ளது
என்னை நினைத்த மனது எங்கே சென்றது
கண்ணில் உள்ள நீறு வற்றிப்போனது ,

வாழ்கை என்னும் சர்க்கரம் சுழலும் பாதையில் 
நானும் சென்று பார்த்தேன் ...
வழி மாறிவிட்டது .

கடலின் நீளம் தான் எங்கே அளப்பது
துன்பத்தின் விளைவை எப்படி விளக்குவது

உன்னை நினைக்கும் பொது மனம் சந்தோஷ படுகிறது
ஆனால் நீ இங்கு இல்லையே
என நினைக்கும் பொது கண்கள் கலங்கி போனது

சோகம் நிறைந்த வாழ்கை சோர்வை தந்தது அன்று
நண்பா நி வரும்  பாதை பார்த்து அதுவும் ஓடிவிட்டது
இன்று என் வாழ்வில் வசச்ந்தம் வீசுது ...

Saturday, January 8, 2011

நட்பு

உன்னை பார்க்கும் நிமிடம் வரை
நான் கண்டதில்லை என் உயிரை .
சுவாசம் கூட தனி தனி தான் ஆனால் நீயும்  நானும் அப்படியா ...

பொறமை பட்டவர் பல கோடி
இன்று அனைவரும் வந்தனர் தெரு கோடி ..

கொடியில்  மலர்ந்த பூ அல்ல நீ !
என் இதயத்தில் மலர்ந்த பூ நீ என் நட்பு

title is ur choice:-)

கொலையே உன்னை கொலை  செய்யும்
கொலை காரா,
கொலை செய்யவா இங்கு நீ பிறந்தாய்
சதிகாரா .
காட்டில் விளங்கும் கொலை செய்யும்
தான் பசி  தீர்க்க ..
மனித கருவில் பிறந்த நீ
செய்கிறாய் உன் பனி முடிக்க.

title is ur choice:-)

காதலால் வாடினேன் ,
காத்து இருந்தே சாகிறேன்
ஏன் இதயத்தோடு கலந்தது போதாதென்று
ஏன் என் மூச்சோடும் கலக்கிறாய் ?
நான் சுவாசிக்கவும் கூடாது என்றா !

title is ur choice:-)

இது கனவு காணும் நேரம் அல்ல
உறங்கிடதே  மெத்தையில்.
இது சிறிது பேசும் நேரம் அல்ல
நண்பர்களோடு கூட்டத்தில் .
இது விளையாடும் நேரம் அல்ல 
குழந்தையோடு குலாவி  கொண்டு 
எழுந்து போராடும் நேரமடா
எமனோடு நீ நின்று ..

அன்பானவரோடு ஆசையில் பழகு
கோவத்தில் வந்தால் ரௌத்திரம் பழகு ..
உன் லீலைகள் எதுவானாலும் நீ
நேர் வழியில் செல்.
உன் வாய் மொழி எது ஆனாலும் உன்
வாய்மையால் வெல்.

தோற்பவர் எவர் ஆனாலும் நீ
தோழமையுடன் செல்.
தோற்க்கமாட்டாய்  நீ எபோதும்
துணிவுடன் நில்,

எங்கள் அன்பில் நீ இருக்க என்னடா பயம்  ,
எதிரியை உன் புன்னகையால் தூக்கிபோடு என்றும் உனக்கே   ஜெயம்.

title is ur choice:-)

அசைந்து ஆடும் காற்றே
ஏன் மீது மோதியது ஏனோ!
தேகம் தொட்ட மழை துளியே ,
நீ தவறி சிந்தியது ஏனோ?

ஏன் கண்ணன் பார்த்த பார்வையில்
நீயும் கலந்கிவிட்டை தானோ

சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை
ஏன் உணர்வை வெளிபடுத்த மொழியும் இல்லை
செல்லும் பாதையும் விளங்கவில்லை

கண்மூடி நடக்கேன்றேனடா,
உன் பாத சுவடுகளை தடவி ..

title is ur choice:-)

மற்றவர் யோசனையை நாம் கேட்டு வாழவேண்டுமென்றால்
நம்முடைய யோசனைகள் யாருக்கு ...
அவர்களின் சிந்தனையில் நாம் வாழ்ந்தால்
நமக்கென்று ஒரு உடல் எதற்கு ...

சுயமாக சிந்தி ,
மற்றவரின் கருத்தை பகிர்ந்து கொள்
ஆனால்
உன் மனதின் பாதையில் செல்

உன் வாழ்கையை  வாழ்
ஏனெனில் இது தான் உன் முழுமையான  வாழ்கை.

title is ur choice:-)

மண் மீது மழை கொண்ட பாசம்
கடல் அலை கொண்ட நேசம் ..
ஊடலோடு திரும்பி சென்ற காதலன்
பின கூடலோடு மாறிவிடுவர் - இருவரும்
காரணம் சொல்ல தெரியாமல்
உருகினால் ராதையும் கண்ணனை பார்த்து நகைத்து .

title is ur choice:-)

பேச நினைத்தால் வார்த்தை வாராது
என் நினைவு அலைகளும் தீராது ,
பார்வைகள் ஒன்றும் குறையாது
அந்த நிமிடம் போவதும் தெரியாது ..
என் இமைகள் திறக்கவைத்ததும் நீ
என் இதழ்கள் பேசவைத்ததும் நீ
என் மனது நினைக்கவைத்ததும் நீ
நான் பாட காரணமும் நீ

என் மௌனம் உனக்கு புரியாதா
என் மனதை தொலைத்து விட்டேன் அதுகூட உனக்கு தெரியாதா
சுவற்றில் அடிக்க பயன்படுத்துவார்கள் ஆணி
என் மனதை ஒடித்துவிட்டை போ நீ
புரியவில்லையா நீ ஒரு மக்கு
என்னை மறுப்பதற்கு இது தான் கிடைத்ததா உனக்கு ஒரு சாக்கு ...

title is ur choice:-)

கவிதையே பாட வா, இல்லை
நான் உன்னை பாடவா !
காதலே ஆள வா,  இல்லை
நான் உன்னை ஆளவா !
தென்றலே சேர வா , இல்லை
நான் உன்னில் சேரவா ! 

title is ur choice:-)

எதை எழுத நினைத்தாலும் முடியவில்லை
என் எண்ணங்களும் ஒன்று சேரவில்லை
மரணம் கூட நெருங்க வில்லை ....
நானே இன்று எனது இல்லை.

title is ur choice:-)

என் இதயம் திறந்த நேரம்
என் மனது பறந்தது தொலை தூரம்
நினைத்தேன் நெருங்கிவிட்டேன் வானம்
நடுவில் வந்ததடா பாழ் மேகம்..
தேடினேன் தேடினேன் உன்னை நானும் ..
மேகம் அடித்து சென்றது சேர்த்து என்னை ...

title is ur choice:-)

உன் அருகில் வந்து நின்றேன் ..
உன் கண்களில் என்னை கண்டேன் ..
உன் இதழ்கள் திறக்கவில்லை ஏனோ ?
என்னை உனக்கு பிடிக்க வில்லை தானோ?..

u plz can give title :-)

மரம் அசைந்தால் வரும் காற்று 
மழை பெய்தால் வரும் வரும் சாரல்
என் இதயம் திறந்தால் வரும்  உன் நினைவு
சுவாசிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
உணர்ந்து கொண்டு இருக்கிறேன்   உன் பிரிவு.
கண்கள் தேடியது உன்னை
கவிதைகள் பாடுதடா பெண்மை
அழகு சேர்த்திடுமே கண்மை
நான் சொல்வதெல்லாம் உண்மை

வழித்தடம்

சிந்திக்க தெரிந்த ஒருவனுக்கு
வாழ்கையில் தோல்வி இல்லை..
சிரிக்க தெரிந்த ஒருவனுக்கு
வாழ்க்கையில் விழிச்சி இல்லை ..
இரண்டுமே தெரிந்தால் உனக்கு
வெற்றி தான் எல்லை .
கற்றுக்கொடுக்க இது பாடம் இல்லை
வாழ்கை நமக்கு தரும் "வழித்தடம்"
விட்டு விலகு உலகை அல்ல
விழிகளின் ஓரம் தேங்கி இருக்கும் கண்ணீரை