Friday, September 30, 2011

tittle is urs

தூய்மையான  இதயம் கொண்ட நேசித்தவரின் தோள்களின் மேல் சாய்ந்து தூங்குவதும் ..
தாயின் கருவறையில் நாம்  தூங்கியதும் ...
எதற்கும் இணையாக கூற இயலாது 

Thursday, September 29, 2011

tittle is urs

நம்  உடலை காயப்படுத்த பலபேர் இருக்கலாம் ..
ஆனால் நம்   இதயத்தை நாம்  பார்த்து பார்த்து நேசித்தவர்களால் மட்டுமே காயப்படுத்த முடியும். 

Wednesday, September 28, 2011

tittle is urs

உன் பெயரை சொல்ல ஒரு நாழி போதும் ,,
ஆனால் உன்னை வரையறுக்க  என் வாழ்நாள் தீரும் .

Tuesday, September 27, 2011

tittle is urs

உன்னோடு  மனம் விட்டு பேச ஆசை பட்டேன் ..
நீயோ என் மனதையே விட்டு  விட்டாய்
தனியாக நான் பேசிக்கொள்ள 

Monday, September 26, 2011

tittle is urs

உன்னை நினைத்து கொண்டிருக்கையில் 
என் விரல்கள் என் மீது பட்டாலும் 
நீ தொட்டதுபோலவே உணர்கிறேன் ...

Sunday, September 25, 2011

tittle is urs

என்ன தான் நடுகடலில் குளித்தாலும் கண்கள் நனைவதில்லை தண்ணீரில் ..
ஆனால் எப்போது நாம் பாசமானவர்களின்   பாசத்தில் சிக்கிவிடுகிரோமோ அப்போதே கண்களும் கலங்கி தானே போகசெய்கிறது 
கண்ணீரில் 

Saturday, September 24, 2011

tittle is urs

உன்னை குழந்தையாக நினைப்பதால் தான் இன்னும்
பேசகற்றுகொள்ளததுபோல் என்னிடம் ஊமையாக இருக்கிறாயோ

tittle is urs

உன்னை மகனாக சுமக்க  எனக்கு வயது இல்லை ...
ஆனால் 
உன்னை என் இதயத்தில் சுமக்க பாசம் அதிகம் இருக்கிறது ..
சுமந்து கொண்டிருக்கிறேன் அதனால் உன்னை (உன் நினைவை )

Thursday, September 22, 2011

tittle is urs

நான் கண்களை திறந்துகொண்டே முழ்கிவிட்டேன் 
உன் நினைவுகள் என்னும் அலைகளில் 

Wednesday, September 21, 2011

tittle is urs

நான் என்னை இழந்து உன்னை பெற்றேன் நேற்று ...
நீ என்னை மறந்து  இன்னொருவரை பெற்றாய் இன்று ....
அப்படி எனில் நாளை என்ன செய்வாய் ...
வாழ்கை ஒரு வட்டம் என்பது இது தானா 

Tuesday, September 20, 2011

tittle is urs

நாம் சிறிக்கும் போது நம்மை சுற்றி இருக்கும் பலரின் 
மனதை புரிந்து கொள்ளும் முன், 
நாம் அழும்போது நம்மோடு சேர்ந்து வருந்தும் நம் 
மனதின் எண்ணத்தை புரிந்து நடந்துகொண்டால் 
உலகத்தில் நம்மை  வெல்ல பிறக்கபோகின்றவனும்
ஒருவனும்  இல்லை 

Monday, September 19, 2011

tittle is urs

உன்னோடு நடந்து செல்லும் போது  வார்த்தைகள்  என்னிடம் இல்லை 
என்னை விட்டு நீ  நகரும் போது என்னிடம் நானே இல்லை  

Saturday, September 17, 2011

tittle is urs

ஒவ்வொரு முறை தோற்கும் போதும் துவண்டு விடாதே ...
அடுத்தமுறை நீ எதை செய்யகூடாது என்பதை 
இன்று  கற்றுக்கொண்டிருகிறாய்
என்பதை மறந்து 

Friday, September 16, 2011

tittle is urs

நான் எது செய்தாலும் தொந்தரவாகவே நினைக்கும் நீ,
நீ என் மனதுக்குள் செய்யும் தொந்தரவை புரிந்து கொள்ளதாது  ஏன்

Thursday, September 15, 2011

tittle is urs

தொட்டு பார்க்க  ஆசை தான் ..
இருந்தும் தொடமுடியவில்லை
உன்னை சுமந்து கொண்டிருக்கும் என் இதயத்தை 

Monday, September 12, 2011

tittle is urs

அரைக்க அரைக்க தேயுமாம் அம்மி 
இத சொல்லி கொடுத்தது   என் மம்மி 
அதுக்காக என்ன நினைக்காத நீ டம்மி 
உனக்கு  மின்னாடி இது ரொம்ப கம்மி 
ஹ ஹா  ஹ

Saturday, September 10, 2011

tittle is urs

கண் மூடியே கிடக்கிறேன் உன் முன் .,..
காலம் முழுதும் நீ என்னை கண்திறந்து பார்த்து கொண்டிருப்பாய் என்பதற்காக 

Thursday, September 8, 2011

tittle is urs

சோம்பலிலும் உன் நினைவுகள் 
என் கண்களை பளிச்சிட வைத்தது  ...
என் வீட்டு  கண்ணாடியில்  கண்டேன் இந்த விந்தையை...


Wednesday, September 7, 2011

tittle is urs

விட்டு கொடுப்பதும் ..
விட்டு விலகுவதும் ..
மனிதர்களாகிய நாம் தானே தவிர..
நம்மில்  புதைந்து கிடக்கும் நம்முடைய  மனது அல்ல 

Tuesday, September 6, 2011

tittle is urs

நினைத்தவரோடு  வாழக்கையில் வாழமுடியவில்லை 
என்று  நினைத்து வருந்தாதே..
நீ அவர்களின் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாய் 
இப்போது   என்பதை மறந்து ...

நிஜத்தை விட நினைவுகளின் உணர்வுகளே வலிமை ஆனவை ஆழமானவை 
அழகானவை யாராலும் திருடமுடியதவை 
என்றும் உனக்கானவை 

Monday, September 5, 2011

tittle is urs

நெருக்கமான உடைகளையே  வெறுக்கும்  
என் மனம் ..
உன்னிடம்  எப்படி நெருக்கமானது ...

Sunday, September 4, 2011

tittle is urs

இதயத்தில் என்ன சத்தம்,..
இனிக்குதே நினைக்கையில் நித்தம்...
மனசுக்குள் தினம் யுத்தம் ...
உன் காதில் இப்பொது ரத்தம்...
அடங்கமாட்டேன் நானும்..
அளக்கமுடயுமா உன்னால் வானம் 

Saturday, September 3, 2011

tittle is urs

உன் மனம் எந்த அளவு உண்மையான  நண்பர்களை 
உன் அருகில் வைத்துக்கொள்கிறதோ ...
அதே அளவு உன்  கவலைகள் உன்னைவிட்டு  விலகி நிற்கும் ..
இது உண்மை 
உணர்ந்து பார் ... உண்மையானவர்களின்  மத்தியில் 

tittle is urs

உடலுக்குள் ஓர்  சிலிர்ப்பு ...
பனிக்காற்றால்  வந்தது என நினைத்தேன் ...
பின்பு தான் தெரிந்தது வந்தது தென்றல்(நீ) ஆயிற்றே சிலிர்க்காமல் இருக்குமா 

Friday, September 2, 2011

tittle is urs

என் கண்ணில் வந்த கண்ணீரை 
துடைத்து விட்டது உன் விரல்கள்
கண்ணீர் அடங்கியும் வரவைத்தேன் கண்ணீரை வேண்டுமென்றே 
இன்னொரு  முறை நீளுமே  உன் விரல்கள் என் கண்ணீரை துடைக்க என்று

Thursday, September 1, 2011

tittle is urs

உன்னை அணைக்க கைகள் இருந்தும் அருகில் நீ இல்லை ...
என்னை நினைக்கும் அளவுக்கு உன்னிடம் மனம் இருந்தும் அதில் நான் இல்லை
பூ இல்லாத ரோஜா செடிக்கு மதிப்பு எவ்வளவு ...
நீ இன்றி என் மதிப்பும் அவ்வளவே 

tittle is urs

தொட்டு பார்க்க  ஆசைதான் 
இருந்தும் 
கைகள் தடுத்தது 
மெழுகில் செய்த  ஆப்பில்  போலே அவளது  கன்னங்கள்