Sunday, October 7, 2012

tittle is urs

யாரை சொல்லி என்ன செய்ய
நான் சொல்வதை கேட்கிறதா
என் மனம் ..
உன்னை தேடி தானே போகிறது
தினம் தினம் ..

மறக்க முடியவில்லையே
ஒரு சிறு கணம் ..
வந்து தான் சேர்வாயோ
ஒரு தினம் .

Saturday, September 22, 2012

thanimayil azhugai

நம்மை விரும்பாத ஒருவருடன் அருகில் இருந்து சில மணிநேரம் பேசுவதை விட...
தனிமையில் இருந்து பல மணிநேரம் அழுவதே மேல் ...

kaneer kulam

என் கண்களும் குளமாக மாறியது ....
வழியவந்த கண்ணீர் துளியும் விழாமல் உறைந்து போனதால் ....
நீ என்னை மட்டும் அல்ல என் கண்ணீரையும் கல்லாக்கி விட்டாயே ...

pala mugam

பல முகங்கள் உன்னில் இருப்பது... ஏனோ! அன்பே ,
என் ஒரு முகத்துக்கு தெரியாமல் போனது...

aaratha kaayam manathil

ஆறாத காயம் தந்தாய் என் மனதில் ...
அது ஆறும் முன்னே வந்தாய் எதிரில் ...
இன்று பட்டதே உன் முகம் என் கண்ணில்...
என் நிழலும் விழாமல் போனதே மண்ணில்...
(அதையுமா திருடிசென்று விட்டாய் என்னிடம் இருந்து.)

Wednesday, September 19, 2012

inaiyum anbu.

இணையாத தண்டவாளத்தில் நாம் நடந்து சென்றாலும் ..அது
இணையும் இடத்தில் நாம் சேர்ந்திடுவோம் ...
இணையாத ஏதும் எங்கும் இல்லை ....
இணையும் இடமே நம் அன்பின் எல்லை ...

Tuesday, September 18, 2012

tittle is urs

உன்னை இதயத்தில் நுழைக்க அழுத்தம் கொடுத்தால்...
கண்களில் தண்ணீருக்கு  பதிலாக கண்ணீர் ... வெளியேறுகிறது

Monday, September 17, 2012

tittle ir urs

எத்தனை பேர் என்னை சுற்றி இருந்தாலும்...
என்னால் எத்தனை பேர் வாழ்ந்தாலும்..
நான் அணைக்கயாருமின்றி அனாதையாய் நிற்கிறேன் - சூரியன்

Saturday, September 15, 2012

unakkaga

கிடைக்காது என்று தெரிந்தும்
மறக்க முயன்றதில்லை ...
வலிக்கும் எனதெரிந்தும் இதயம்
துடிப்பதை நிறுத்தவில்லை - உனக்காக .

Friday, September 14, 2012

tittle is urs

நான் வேண்டாம் என விலகி போகும் போதெல்லாம்  நீ விரும்பி விரும்பி வந்தாய்...
நான் விரும்பி வரும் போது நீ விலகி போகிறாய் - தூக்கம்.

 expansion :
நேசிக்கும் ஒருவர் அருகில் இருக்கும் போது தூக்கம் வேண்டாம் என நினைத்தாலும் கண்கள் தூக்கத்தின் பாதையில் செல்லும் ....அந்த ஒருவர்  இல்லாத போது உறங்க நினைத்தும் வராமல் மறுக்கும் ...

Thursday, September 13, 2012

nesithavarai kaayappaduthaathey

நமக்கு பிறர் செய்த உதவியை காட்டிலும் பெரியது ..
நம்மை முழுமையாக நேசித்த மனிதரின் பாசம் ...
நேசித்த ஒருவரை இன்று நீ அழவிடலாம்..
ஆனால் நிச்சயம் நாளை நீ அழுவாய் ..... அவர்களை காயப்படுத்தினால் ...

Tuesday, September 11, 2012

tittle is urs

அப்படி நீ பார்த்தால் தான்..
இப்படி நான் ஆகிவிட்டேன் -
காதலியிடம் காதலன் .

Monday, September 10, 2012

kobamana vaarthai

நான் விரைவில் இறந்து விடுவேன் ,
ஆனால் என்றுமே உன்  மனதில் வாழ்ந்துகொண்டிருபேன்    - கோபமான வார்த்தை

expansion :
நீ  பேசும் கோபமான வார்த்தைகள் சில நொடிகளில் மறைந்து  விடலாம் .... ஆனால் நீ அதை யாரிடம் சொன்னாயோ அவர்  மனதில் இருந்து என்றுமே மறைவதில்லை

Saturday, September 8, 2012

tittle is urs

நீ இன்றி நானும் ....
நிலவில்லா வானம்...
ரசித்திட கண்கள் உண்டு...
ரசிக்கத்தான் இல்லையே நீ இங்கு ...

tittle is urs

எனக்காக அழுவதற்கு நீயாவது இருகிறாயே -என் இதயம் கண்களிடம் சொன்னது ...

Wednesday, September 5, 2012

tittle is urs

நான் வாய் திறந்து எத்தனை பேரிடம் பேசினாலும்...
வாய் மூடி இருக்கும் போதும் பேசிக்கொண்டிருப்பது உன்னிடமும் உன் நினைவிடமும் மட்டுமே ...

tittle is urs

ஆசை எல்லாம் சேர்த்து வைத்தேன் ஒரு நாள் உன் தோள்களில் சாய்ந்து பகிர்ந்துகொள்ள ..
என் ஆசைகள் எல்லாம் அப்படியே இருக்க ... இன்று  உன் தோளில் வேறு யாரோ ....

Tuesday, September 4, 2012

tittle is urs

சோகம் இருக்கும் போது சுகங்கள் கண்ணில் தெரிவதில்லை ...
அதிக காசு இருக்கும் போது பலருக்கு கடவுளே (தன்னிடம் இல்லை என்று கேட்கும் ஏழை மனமே ) கண்ணுக்கு தெரிவதில்லை ..

tittle is urs

உன் கண்களுக்குள் தேங்கி (வராமல் மறைந்து இருக்கும்) கண்ணீர்த்துளிகளை உன் இமைகள் மட்டும் அல்ல
என் இதயமும் அறியும் ...

tittle is urs

புத்தகம் அருகில் தான் இருக்கிறது தொட மனமில்லை ..
நீ எங்கேயோ இருகிறாய் உன்னை தொடாமல் இருக்க முடியவில்லை - இப்படிக்கு my brain

thougth of the day


todays thought :
உன்னுடைய பாசம் உண்மை என்றால் அதை நின்று நிரூபி...
மற்றவரிடம் சென்று "பேசாதே" என்று சொல்லி தடுக்காதே ...

tittle is urs

நீ என்னை புரிந்தவளா..
என்னை நன்கு அறிந்தவளா ..நான் அறியேன் ...
ஆனால் நிச்சயம் நீ எனக்காக பிறந்தவள் என்பதை அறிவேன்

tittle is urs

உன்னை பிறர் அழவைத்தால்
அது மற்றவரின் குற்றம்...
அழுத பின் நீ சிந்தித்து சிரிக்காமல் போனால்
அது நிச்சயமாக உன் குற்றம் ...

Thursday, August 30, 2012

tittle is urs

எவனொருவன் உன்னிடம் பணத்தை எதிர்பார்கிறானோ அவன் கண்களில் உனக்காக கண்ணீர் வருவதில்லை ..
எவனொருவன் உன் மனதை பார்த்து நேசிக்கிறானோ அவன் கண்கள் கலங்காமல் நீ விடுவதில்லை ...

tittle is urs

எல்லோருக்கும் இதயம் உள்ளே இருபதாக தான் உணரமுடிகிறது ...
எனக்கு மட்டும் ஏன் வெளியே இருப்பதாக தோன்றுகிறது நீ ஏன் முன் நிற்கும் போது ;-)

tittle is urs

உதிரும் பூக்களில் சிதறிய நீர் துளியாய் ...
வந்தும் வராமல் ஓரத்தில் நிற்கிறது உன் இதழ்களில்  புன்னகை ..

Sunday, August 26, 2012

tittle is urs

நேற்றுவரை தொடுவேன் என்று நினைக்க வில்லை ..
இருந்தும் இன்று தொட்டு விட்டேன் உன் இதயத்தை..
என் நட்பு என்னும் விரல்களால் ... :-

tittle is urs

இதயத்திற்கு உன்னை நினைத்து வலிக்க  தான் தெரியும் .
ஆனால் கண்களுக்கு  உன்னை நினைக்கும் போது ஏற்பட்ட வலியுடன் அழவும்  தெரியும் ....

Tuesday, August 21, 2012

நீ இல்லா நேரம்ம் ம் ..
என் விழிகளின் ஓரம்ம் ம் ..
கண்ணீரால் ஆனதே ஈரம்ம் ம் ...

Monday, August 20, 2012

pirivin vali azhavaikkum

யாருடைய சிரிப்பில் நீ இன்று மயங்கி சிரிக்கிறாயோ ..
அவன்/அவள் உன்னை நிச்சயமாக அழவைத்து பார்க்கக்கூடும் பின்னாட்களில் ..

expansion:
இன்று அவர்களின் சிரிப்பும் நினைவும்  நம்மை அதிகமாக நேசிக்க வைத்தததால்  அவர்களின் பிரிவு நம்மால் தங்கி கொள்ளமுடியாமல் நாம் நாளை அழவேண்டி வரும் ... 

Sunday, August 19, 2012

kall thadukiyum maravillai manam

நான் யாரையுமே காயப்படுத்த  கூடாது என்று விலகி கல்லை (stone) போலே நிற்கிறேன் ...
பாவம்  சிலர் கல்லிலே முட்டி அடிபட்டும் திருந்த மறுக்கின்றனர் ...

Saturday, August 18, 2012

tittle is urs

காதலுக்கு  உன் உடலை தரவேண்டிய தேவை இல்லை ...
உன் மனதை தந்தால் போதும் ....
உண்மையான அன்பு இதயத்திலே தொடங்கி இதயத்திலே வாழும் ..

Friday, August 17, 2012

ithu namudayatha illaya

பல நாட்கள் நாம் இப்படி ஒருவர் தான் வேண்டும் என்று நினைத்து இருப்போம் ... ஆனால் சில  சமயங்களில்...
 நாம்  அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது .. ஒன்று அவர்களுக்கு திருமணம் ஆகி இருக்கும் இல்லை நமக்கு ஆகி இருக்கும் ..

Thursday, August 16, 2012

netru seithathu indru varum

இன்று நீ அழுகிறாய் என்றால் ..
நினைவில் கொள் நேற்று நீ யாரையோ அழவைத்து இருகிறாய் ..

இன்று உன்னை ஒருவர் ஏமாற்றினால் மறந்து விடாதே ..
நீயும் ஒருவரை ஏமாற்றி இருகிறாய் என்பதை...

இன்று நீ தோல்வி அடைகிறாய் என்றால் தெரிந்துகொள்   நேற்று நீ யாரையோ வென்று இருகிறாய் ...

மொத்தத்தில் இன்று உனக்கு நடக்கும் எதுவும் நீ நேற்று மற்றவருக்கு செய்ததே ...
யாரையும் சபிக்க வேண்டாம் ..
எல்லாம் நன்மைகே ... இதையும் மறந்து விடாதே.

Tuesday, August 14, 2012

tittle is urs

நான் பிறக்கும் பொழுது கடவுள் எனக்கு ஒரு இதயத்தை கொடுத்தார்...
உன்னை பார்த்த பின் ஒரு இதயத்தை பல துண்டாக உடைத்து நீ  கொடுத்தாய் ...
ஏன் என கேட்டால் :-
வலியை பங்கு போட்டு கொள்வதற்காகவாம்

Monday, August 13, 2012

tittle is urs

நீ நேசித்தவருடன் இணைத்து   பார்க்கும் பொழுது தான் உன் பெயரும் உனக்கு அழகாக தெரியும் !!!

just try this from ur mind... feel the difference

Sunday, August 12, 2012

tittle is urs

என் அமைதி கல்லறையிலே இருக்குமே தவிர
உண்கண் முன் இல்லை

Saturday, August 11, 2012

tittle is urs

ஒருவரின் முகத்தை பார்த்து ஏமார்ந்து விடாதே..
ஒருவரின் மனதை பார்த்த பின் ஏமாற்றி விடாதே ...

expansion :
ஒருவரின்  முகம் பார்த்ததும் தெரியும்...
ஒருவரின் மனம் புரிந்த பின் தான் தெரியும் ..
உன்னை புரிந்த ஒருவரை  ஏமாற்றுவது உன்னை நீ ஏமாற்றி கொள்வதற்கு சமம்

tittle is urs

மனது  கனமாய் (ரனமாகி) இருக்கும்போது
வயிறு எப்படி பசிக்கும்...

Friday, August 10, 2012

anbey kadavul

உண்மையான கடவுள் என்பவன் ஒரு மனிதனின் அன்பான இதயத்தில் தான் இருக்கிறான் ... அனைவரையும் நேசிப்பதில் தவறல்ல உண்மையான அன்பு எதையும் எதிர்பார்க்காது அன்பை தவிர .... அதனால் ஒருவனின் தேவையற்ற ஆசைக்கு நீ இடம் கொடுக்காமல் இரு .. நம்மை வழிநடத்துவான் .. அன்பின் வழியாக அதே கடவுள் மறந்து விடாதே ...

tittle is urs

பூக்கள் மலர்வதை தான் கேள்விபட்டிருக்கிறேன் ..
இதுவரை நம்பியது கூட இல்லை:  பூக்கள் சிரிக்கும் என்று ..
நீ சிரிப்பதை பார்க்கும் வரை .. :-)

Wednesday, August 8, 2012

tittle is urs

குழந்தையை சுமக்கும் தாயும் , நேசித்தவரை சுமக்கும்  மனமும் ஒன்று தான் , இரண்டுமே சுமந்த ஒன்றை வெளியே எடுக்கும் போது வலியால் துடிக்கும்..

Tuesday, August 7, 2012

tittle is urs

ஓவ்வொரு முறையும் உன்னிடம் பேசக்கூடாது என்று தான் என் மனம் சொல்கிறது...
உன்னை நினைக்க தொடங்கியதும் உன் மனம் அதை மறக்க செய்து(நான் நினைத்ததை) என்னை வெல்கிறது ...

tittle is urs

மரக்கொத்தி பறவையும் மரத்தின் சக்கையை மட்டுமே கொத்தி செல்லும் ...
என் மனதை கொத்திசென்ற பறவையே ஏன் நீ ஏன் உயிரையும் குத்தி போகின்றாய் ..

Monday, August 6, 2012

anbin vali

உணர்வுகள்கூட நாம் நேசித்தவரை நினைத்து  நம்முல் வலிக்கும் போது தான்:  நம்மை நேசித்தவரின் ஆழமான அன்பு நமக்கு புரியவரும்.

Saturday, August 4, 2012

happy friendship day

எத்தனையோ பேர் நம்மை காயப்படுத்தி  விட்டு சென்றாலும்..
நம்மை கட்டி அனைத்து பாசம் என்ற மருந்தை இதயத்திற்குள் செலுத்துபவன் நண்பன்..

எத்தனை துன்பம் வந்த போதும் ..
உன் முகத்தில் புன்னகை வரவழைத்து பின்பு காரணத்தை அலசும் உயர்ந்த மனமும்  அவனுடயதே ..

எத்தனை நாட்கள் அவன் வருகைகாக காத்து இருந்தோம் என்று எண்ணம் நாம்  வருந்தும் நாட்களிலே தான் தெரியும்.. அன்று அவனை நம் விழிகள் தேடும் ...

இத்தனையும் உனக்கே தெரியாமல் நீ  செய்தாய் அப்படிப்பட்ட  உன்னை இழந்து விட கூடாது என்பதே என் ஆண்டவனிடம் நான் செய்யும் பிரார்த்தனை ...

முடிந்தவரை ... என்னால் வாழ முடிந்தவரை ..
நம் நட்பிற்கு நிகராக என்னால் ஏதும் கொடுக்க முடியாது வரையறை ..
இணையாகுமோ நம் அன்பு நட்பிற்கு சர்க்கரை ..

Friday, August 3, 2012

un ethiri

நாம்  நேசிக்கும் இதயமே ஒரு நாள் நமக்கு எதிரி யாகிறது ... நம்மை அது உதறிவிட்டு செல்லும் பாதை முதலே அது  தொடர்கிறது ..

Sunday, July 1, 2012

நீ எத்தனை காயம் தந்தாலும் நான் உன்னை வெறுக்க வில்லை ..
ஆனால் உள்ளுக்குளே இறக்கிறேன் அன்பே !!!.

Friday, June 1, 2012

tittle is urs

செய்து வைத்த பணியாரமும்,
முகத்துக்கு போட்ட அலங்காரமும்
ஒரு நாளைக்கு மேல நல்ல இருக்காது ...
hahaha

Thursday, May 31, 2012

உலகத்தில் நமக்கு எந்த உறவு வேண்டுமென்று நினைகின்றோமோ  ..
அதனிடம் இருந்து சற்று விலகி பழகுவதே நல்லது ..
ஏனெனில்,
அறிவாளி அறிவான் உன் உடல் அவர்களை விட்டு விலகி நின்றால் மட்டுமே
உன் மனம் அவர்களை நெருங்கி செல்லும் என்பதை...
முட்டாளுக்கு எப்படி புரியவைப்பது...
உன் மூன்று அடி தூர பேச்சை புரிந்து கொள்ளாத போது !!

Thursday, April 12, 2012

thamil puthandu vazthukkal

ரமான நூல்களை 
மிர்தமாய் நமக்கு தந்த 
தமிழ் மொழிக்கு நன்றிகளோடு 
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் சித்திரை திருநாள்  வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.  

Wednesday, April 11, 2012

titte is ur choice

கடல் உள்வாங்கினா  வெளிய வரும் சுனாமி ,
உழல் செஞ்சவன்  உள்ள போனா வெளிய வருவான் அவன் பினாமி.
ஹே டண்டணக்கா ஹே டனக்குநக்கா !!!

Friday, March 9, 2012

titte is ur choice

சிறகு இல்லாத பறவையாய்
சிறகை உடைத்து அடைத்தார்கள் கூட்டினுள் நம்மை ,
எனினும் நாம் அனைவரும் சிரகில்லாமலே  பறந்து கொண்டிருக்கிறோம்
இங்கு... நட்பெனும் இதய கூட்டினுள் 

Thursday, March 8, 2012

titte is ur choice

யார் யாரோ
ஏதேதோ செய்தார்கள்
என்னை "மயக்க"...
நீ ஒன்றும் செய்யவில்லை
என் அருகில் நகர்ந்தாய்
மயங்கி போனேன் உன் கண்  இமைகள் "இமைக்க"!


Saturday, March 3, 2012

think

உலகம் 2012 இல் அழியும் என்று மாயன் காலேண்டர் சொல்லுதாம்
அத நம்புறவங்க ஏன் கூடங்குளம் அணுமின் நிலயத்த start  பண்ண விடமாற்றங்க...
எப்படியும் அத ரெடி பண்ண 5 வருஷம் ஆகும் ல...
அப்போ உலகம் 2012 ல அழியாது தானே ? 
அட போங்கப்பா எனக்கு ஒன்னுமே புரியல 
உங்களுக்கு எதாவது புரியுதா மகாஜனங்களே !


ஒண்ணுமே புரியல உலகத்துல ஒத் sorry   தமிழ் நாட்டுல !

Wednesday, February 29, 2012

titte is ur choice

கண்களில் பதியும் அனைத்து உருவமும்
இதயத்தில் பதிவதில்லை.
இதயத்தில் பதிந்த அந்த  உயிரை- பிறரது கண்கள்
நமக்காக அனுமதிப்பதில்லை ... .

Monday, February 27, 2012

titte is ur choice

சுனாமி பூகம்பம் வரும் போதெல்லாம்
நிவாரணம் கொடுக்கும் அரசாங்கமும்
ஒரு மனிதன் காதலில் சிக்கி சிதைந்து  விடும் போது 
நிவாரணம் தர வருவதில்லை ஏனெனில்
என்ன கொடுத்தாலும் சிதைந்த இதயம்
ஒன்று சேராது என்பதால் மட்டுமே. 

titte is ur choice

நாம் நேசிக்கும் இதயத்தின் உடல் நமக்கு  கிடைக்காமல் போவது இயல்பு 
ஆனாலும்
நேசித்தவரின் உயிர் நம்மை சுற்றியே இருக்கும்
இது பல காலமாய் நடக்கும்  நிகழ்வு .

Saturday, February 25, 2012

titte is ur choice

கனவிலும,
நான் என் கண்களை திறந்து பார்க்க ஆசைபடுகிறேன் ...
நீ என் அருகில் இருக்கும் போது மட்டும் ...
.

Tuesday, February 21, 2012

titte is ur choice

நான் அவளுக்காக எழுதிய காதல் கடிதத்தை ...
என்னை சரியாக காட்டும் கண்ணாடியின் பிம்பமே
"நேர் எதிராக" தான் காட்டுகிறது ,,
அப்படி இருக்க அதை  அவள்  எப்படி
உடனே புரிந்துகொள்ள முடியும் - மனதை தேற்றிக்கொள்ள 
நான் உவமைகளை தேடி அலைகிறேன் இப்படி!

Monday, February 20, 2012

titte is ur choice

அதிகமாக ஆசைவைக்க மனம் இருக்கிறது ...
அது  யார் மீது வைப்பது என்பதில் தான் பலருக்கும் குழப்பம் நீடிக்கிறது .
பாசம் வைக்க பணம் தேவை இல்லை ..
உண்மையை சொல்லவேண்டுமெனில்
காதலிக்க உருவம் தேவை இல்லை ...
காதல் கண்ணில் தோன்றி மனதில் தான் முடியவேண்டுமே தவிர, 
உடலில் முடியகூடாது , என்னெனில்   இறந்து விடுமே உடல்.

Saturday, February 18, 2012

titte is ur choice

நாம்  நேசித்தவரின் மனதை பொறமை என்ற
ஒரு ஆயுதம் கொண்டு நாம் எப்படி காயபடுத்தினோம்
என்பது ..
நம்மை ஒருவர் நேசிக்கும் போது நம் நண்பர்களிடம் கூட பேசவிடாமல் அந்த பொறமை (அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என ) தடுக்கும் போது தான்
நம் தலையில் நறுக்கென கொட்டியதை போல் விளங்கும்.


இது தான் முற்றிலும் நிறைய பேர் வாழ்கையில் உணரப்பட்ட  உண்மை 

Friday, February 17, 2012

titte is ur choice

நாம்  எதிர்பார்த்த அனைத்து குண நலன்களும்
ஒருவரில்  இருக்க
அவர்கள்   மட்டும்
நமதானவராக  இல்லாமல் போவது ஏன்!!


Thursday, February 16, 2012

titte is ur choice

பெண்ணை உற்று உற்று பார்ப்பதும் இந்த கண்கள் தான்
பின்பு உருகி உருகி அழுவதும் இதே கண்கள் தான் ...
"முற்பகல் செயின் பிற்பகல் விளையும் " என்பது இதற்க்கு தானோ !

Tuesday, February 14, 2012

titte is ur choice

கடைசி வரை உன் இதயத்தில் நான்
என் இதயத்தில் நீ - என்று அமைதியாக 
மனதில் உலாவிக்கொண்டு இருப்பது தான் காதல் .
அது பூங்காவிலும் கடற்கரையோரத்தில் உலவவிட்டுவிடாதீர்கள்
இதயத்திற் கென்று ஒரு மரியாதையை உள்ளது..
அதில்  உண்மையானவரை அமர்த்துங்கள்

Friday, February 10, 2012

titte is ur choice

முகத்தை ஒப்பனை செய்துகொள்ள 
எத்தனை அழகு சாதன பொருட்கள் இருந்தாலும்..
அறுபது வயதுக்கு மேல் அழகு நிலைப்பதில்லை. 
மனதை ஒப்பனை செய்ய ஒரே  ஒரு நல்ல  நண்பன் போதும் 
அதற்கு (மனதின் இளமைக்கு ) அழிவே இல்லை. 

Thursday, February 9, 2012

titte is ur choice

நாம்  சொல்வதை நம் மனதே கேட்காத போது..
நாம் பிறரை வறுந்தி என்ன பயன்..
பொறுத்துக்கொள்ள தான் தோணும் ஒவ்வொரு  முறையும் 
ஆனால் ,
பிரித்து விடுகின்றனரே அதற்குள் நம்  கண்ணீரை கண்களை விட்டு !!

Wednesday, February 8, 2012

titte is ur choice

இதயம் இரண்டாக இருந்து இருந்தால் 
விட்டு இருப்பேன் உடைந்து போகட்டுமே என்று..
ஆனால் என்னிடம் இருப்பதோ ஒன்று 
உன் நினைவை தாங்கி கொள்ள அது ஒன்றையாவது இருக்க விடு 
என்னுடன் ...
உன் விளையாட்டுக்கு என் இதயம் பொம்மையாக்கி விடாதே! 

Monday, February 6, 2012

just for fun

கடல் ஒன்று தான் அது பல அலைகளை கொண்டு வரும்..
figure  பல இருந்தும் அனைத்தும் ஒரே கருத்தையே தந்து விட்டு போகும் ..
அலையையும் கையில் பிடிக்க முடியாது ... figure ஐயும்  கையில் பிடிக்க முடியாது 
தத்துவத்தை புரிந்து நடந்துகொண்டால் நமக்கு நல்லது .

Thursday, February 2, 2012

tittle is urs

கடலின்  நீரில்  ship போகும் போது தான்  கடலுக்கு அழகு ...
என் ரத்தக் கடலில் உன் friendship போகும் போது தான் எனக்கு அழகு -
நம் நட்பினால் தான் இன்னும் என் ரத்தம் உரையாமல்  ஆறாக ஓடிக்கொண்டிருகிறது எனக்குள் ....
உன்னை கரை சேர்க்கவேண்டுமே வாழ்கையில் அதற்காக !
 


Wednesday, February 1, 2012

tittle is urs

நாம் நேசிப்பவரிடம் நாம் எதையும் எதிர்பார்பதில்லை..
நம்மை நேசிப்பவரிடம் நாம் எதிர்பார்காமல் இருப்பதில்லை.
மௌனத்தை   நம்மை நேசிப்பவரிடம் நாம் எதிர்பார்க்கிறோம் 
ஆனால் 
அது நாம் நேசிப்பவரிடம்  இருந்து கிடைக்க பெரும்.
இது தான் இயற்க்கை நியதி .

Tuesday, January 31, 2012

tittle is urs

உன் ஆசை : 
பேசுவது நீ யாக இருந்தால் 
அங்கு ரசிப்பது நானாக இருக்க வேண்டும
ரசிப்பது நீ யாக இருந்தால் 
நிச்சயம் என் அருகில் என் தோழி பேசிக்கொண்டிருக்க வேண்டும் ..

Saturday, January 28, 2012

tittle is urs

என்னால் புதியதாக  கூட சிந்திக்க முடிய வில்லை 
உன் நினைவுகளின் துணை இன்றி ...
பின்பு எப்படி புதியதாக வாழமுடியும் எதிர்கால வாழ்கையை 
என்னால்  நீ இன்றி.

Friday, January 27, 2012

titte is urs

இதயத்தை விட ஒரு மோசமான திருடன் என்று 
யாரையும் சொல்ல முடியாது 
ஏனெனில் கண்கள் பார்த்து okay பண்ணின பெண்ணை 
இதயம் இப்படி சுட்டு (திருடி )விட்டதால்  தான்   
இன்று கண்களில் சாபத்தால் இதயத்தை விட்டு
அவள் வேறொருவருடன்  சென்று விட்டாள்...

Thursday, January 26, 2012

titte is ur choice

உன் முன் நின்று பேசுவது எதிரி என்றாலும் 
அவனது வார்த்தைக்கு மரியாதையை கொடு...
உன்னை பற்றி பின்னே பேசுபவன் நண்பன் என்றாலும் 
அவன் வார்த்தையை காதில் வாங்கிக்கொள்ளாதே 
ஏனெனில் இவன் நண்பன் இல்லை நம்பிக்கை துரோகி ...
என்ற உண்மையை உணர்ந்து வீட்டு விடு அடியோடு வெட்டிவிடு அவனது உறவை ...

Monday, January 23, 2012

titte is ur choice

என் உணர்வுகள் மட்டுமே துடித்து கொண்டிருகிறது ....
இதயம் ஏனோ  நின்று போகிறது ...
உன்னை நினைக்கும் போதெல்லாம் .

Sunday, January 22, 2012

titte is ur choice

என்னோடு நீ எப்போது ஓடி வருவாய் என்று எனக்கு தெரியாது ,
பெண்ணே !
என் நினைவுகளில் இப்போதும் நீ ஓடிக்கொண்டு தான் இருக்கிறாய்!!!

Saturday, January 21, 2012

titte is ur choice

என் இதயத்தை கருவறையாகவும் 
என் இதயத்தின் துடிப்பை தாலாட்டாகவும் 
மாற்றி உன்னை சுமந்து கொண்டிருக்கிறேன் ...
நீ உன் இதயத்தில் எனக்காக கல்லறையை 
கட்டிக்கொண்டிருகிறாய் 
என்பதை அறியாமல் ...

Thursday, January 19, 2012

titte is ur choice

என்னை நெருங்காத யாரும்
நிரந்தரமான வெற்றியை பெற்றதில்லை 
-தோல்வி 

Monday, January 16, 2012

titte is ur choice

உனக்காக நான் சிந்திய கண்ணீர் துளி கூட வற்றிப்போனது ..
ஆனால்
உன் மீது வைத்த பாசம் வற்றாமல் அப்படியே தான் இருக்கிறது ...
ஒரு முறை பார் என் உயிர் உன் காலடியில் 
உன்னை தங்க காத்துகொண்டிருக்கும்  பெண்ணே !

Saturday, January 14, 2012

titte is ur choice

பணத்தை தேடி பகலில் அலைந்து கொண்டே இருப்பவனும்..
இதயத்தை தேடி இருட்டில் செல்பவனும்
அமைதியாக தூங்கியதும் கிடையாது ..
பெற்ற பணத்தை கொண்டு சந்தோஷமாய் வாழ்ந்தவனும் கிடையாது .


Friday, January 13, 2012

titte is ur choice

நினைவுகள் வலிமையானவை
அதனால் அது உடைக்கப்படும் போது
இதயம் அடைக்கிறது
 நினைத்தவரை விட மனம் இல்லாமல் ...

Thursday, January 12, 2012

titte is ur choice

நேசிக்க இதயம் இருக்கிறது இங்கு..
நேசத்தை பெற நீ எங்கே இருகிறாய் என்று
தேடி அலைகிறது அவளை என் கண்கள் !