Sunday, January 23, 2011

tittle is urs

நான் என்றுமே தோற்றுக்கொண்டிருகிறேன்
உன் பாசத்துக்கு முன்னால்..
விரும்பியதில்லை  வெற்றிபெற ஒருபோதும்.
விரும்புகிறேன் உன் மனதின் சந்தோஷத்தை
அனுதினமும் ...

tittle is urs

கண் இருந்தும் குருடி தான் ,
உன் அழகு முகத்தை காணும் வரை.

tittle is urs

தேவையான போது மட்டும் என்னை நினைக்கும்
உன் மனதை விட ,
எப்போதுமே  உன்னை மட்டுமே நினைக்கும் என் மனதிற்கு தான்
வலி அதிகம் .
உனக்கு எப்படி புரியும் . .

tittle is urs

பேனா முனையை விட வலிமை
உன் கண்களின்  பார்வை  ,
என்னை தலை குனிய செய்கிறதே,
நி என்னை பார்க்கும் போது வெட்கத்தில் ...

Thursday, January 13, 2011

title is ur choice:-)

என் கண்கள் என்ன பாவம் செய்தது
உன் நிழலை கூட பார்க்க அனுமதி கிடைக்காமல் தவிக்கிறதே .
என் இதயம் என்ன புண்ணியம்  செய்தது .
நீ என்னை நினைக்காமல் போனாலும் உன்னையே நினைக்கும் வரத்தை பெற்றதே.

title is ur choice:-)

ஊர் முழுவதும் நல்ல நண்பனை தேடி
அலையாதே ..
உன்னுடைய நண்பர்களுக்கு நீ நல்ல நண்பனாக இரு
இந்த உலகமே உன்னை சுற்றி இருக்கும் உன்னை நண்பனாக்கி கொள்ள .

title is ur choice:-)

உனக்கு பிடிக்காத எதையும் நான்
நினைப்பதே  இல்லை ...
என்னையும் சேர்த்து.

தோல்வி=வெற்றி

நி ஒவ்வொரு முறை தோல்வியடையும்   போதும் ,
சிரித்துக்கொண்டே சொல் ...
நீ தோற்றால் அழுது விடுவாய் என்று ..
உன்னை பார்த்து சிரித்தவரிடம்.

வெற்றி என்பது எப்போதாவது  தான் வரும்.
தோல்வி எப்போதுமே  வரும்..
என்றோ வரும் வெற்றிக்காக எப்பொதுமே நம்முடன்  இருக்கும் தோல்வியை வெறுப்பது ஏன் ?

தோல்வியையே நண்பனாக்கி வெற்றி காணுவோம் ,,
வாழ்வில் சரித்திரம் படைப்போம்.

title is ur choice:-)

தினமும் காலையில் உன் முகத்தை பார்க்க முடியவில்லை என்றாலும் ,
உன்னை நினைக்காமல் என் பொழுது விடிவதே இல்லை.
தினமும் நான் உன்னுடன் பேச முடியவில்லை என்றாலும்,
நீ சொல்ல நினைத்ததை செய்யாமல் இருந்ததில்லை .
தினமும் நான் நீ செல்லும் பாதையில் வருவது இல்லை
என்றாலும்  உன் பாதையை நீ நெருங்கும் முன்பே உனக்கு முன் நானிருப்பேன்..
நீ நினைக்கும் அனைத்தையும் நான் இங்கேருந்தே செய்வேன் ...
ஏனெனில் உன் உடல் மட்டுமே  அங்கு உள்ளது உன் மனம் இங்கு என்னோடு  தானே இருக்கிறது  .

title is ur choice:-)

யார் நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்தாலும்,
உன் உதடுகள் இரண்டும் ஒத்துழைக்க வில்லை என்றால் என்ன பயன் .
உன் வலிக்கு நீ மட்டும் தான் அழமுடியும்  உன் கண்களால் ,,
உன் மீது பாசம் வைத்தவரால்  மட்டுமே அதையும்  உணரமுடியும் ,

Tuesday, January 11, 2011

title is ur choice:-)

உனக்காக உன் இதயம் மட்டும் அல்ல
நானும் துடித்து கொண்டு தான்
இருகிறேன் இங்கே..
       உன் இதயத்தின் ஓசையை
முக்கியமாக கருதும் நீ..
ஏன் நான் பேசும் ஓசையை
கேட்க மறுக்கிறாய் ?

உன் இதயத்துக்கு மட்டும் தான்
உரிமை உள்ளதா உன்னோடு பேச

உன் நண்பன்

உலகில் மற்றவரை நாம் நண்பர்களாக்கி
கொள்வதற்கு முன்பு
நம் மனதை நண்பனாக்கி  கொண்டால்
நாம் என்றுமே தனிமை படுத்தபடுவது  இல்லை ...

title is ur choice:-)

கவிதை என்பது யோசித்து வருவது அல்ல
அன்பான ஓயருவரை நினைக்கும் போது
இல்லக்கணம் தெரியாதா ஒருவனும்
எழுதும் அழகான வரிகள் தான் ...

அப்படி நான்  கண்ட  உனக்கு
இந்த அழகான வரிகளை  அன்பாக
சமர்பிக்கிறேன் கவிதையாக ஏற்றுக்கொள்வாயா!

title is ur choice:-)

நான் எவ்வளவு உயரத்தில் சென்றாலும்
நீ ஒரு முறை என்னை நினைத்தால்
அடுத்த நிமிடம் உன் முன் இருப்பேன் ...
நீ மண்ணோடு  கலந்து இருந்தாலும்
உன்னோடு கலந்திடுவேன்

மன்னிப்பு

ஓவ்வொரு  நொடியும் உன்னை   பார்க்க ஏங்குகிறேன் , இப்போது
ஏன் ? நீ அப்போது  கேட்டபோது மறுத்த காரணத்தாலோ

திரும்ப ஒரு முறை உன்னை சந்திக்கும்
நேரம் கிடைத்தால் போதும் எனக்கு
கலந்து உரையாட அல்ல
உன்னிடம் மன்னிப்பு கேட்க ...

ஒரு தலை காதல்

குளத்தில்   தான்  தாமரை இருக்கிறது
ஆனால் தண்ணீருக்கும் தாமரைக்கும் தொடர்பு இல்லாதது போல்
நீயும் உன் நினைவும் என்னோடு இருந்தும் ..
நீ மட்டும் படும் படாமலும் இருபது ஏன்...

நீ என்ன தாமரையா
தன்னை தாங்கும் நீரும் ஒட்டவிடாமல் செய்ய

title is ur choice:-)

ஓடுகின்ற நதியே நீ எங்கே போகின்றாய்
பாடுன்கிற மனதே நீ யாரை தேடுகின்றாய்
அசைகின்ற காற்றே நீ யாரிடம் சேர்கின்றாய்

உன்னை நினைக்கும் மனது இங்கு உள்ளது
என்னை நினைத்த மனது எங்கே சென்றது
கண்ணில் உள்ள நீறு வற்றிப்போனது ,

வாழ்கை என்னும் சர்க்கரம் சுழலும் பாதையில் 
நானும் சென்று பார்த்தேன் ...
வழி மாறிவிட்டது .

கடலின் நீளம் தான் எங்கே அளப்பது
துன்பத்தின் விளைவை எப்படி விளக்குவது

உன்னை நினைக்கும் பொது மனம் சந்தோஷ படுகிறது
ஆனால் நீ இங்கு இல்லையே
என நினைக்கும் பொது கண்கள் கலங்கி போனது

சோகம் நிறைந்த வாழ்கை சோர்வை தந்தது அன்று
நண்பா நி வரும்  பாதை பார்த்து அதுவும் ஓடிவிட்டது
இன்று என் வாழ்வில் வசச்ந்தம் வீசுது ...

Saturday, January 8, 2011

நட்பு

உன்னை பார்க்கும் நிமிடம் வரை
நான் கண்டதில்லை என் உயிரை .
சுவாசம் கூட தனி தனி தான் ஆனால் நீயும்  நானும் அப்படியா ...

பொறமை பட்டவர் பல கோடி
இன்று அனைவரும் வந்தனர் தெரு கோடி ..

கொடியில்  மலர்ந்த பூ அல்ல நீ !
என் இதயத்தில் மலர்ந்த பூ நீ என் நட்பு

title is ur choice:-)

கொலையே உன்னை கொலை  செய்யும்
கொலை காரா,
கொலை செய்யவா இங்கு நீ பிறந்தாய்
சதிகாரா .
காட்டில் விளங்கும் கொலை செய்யும்
தான் பசி  தீர்க்க ..
மனித கருவில் பிறந்த நீ
செய்கிறாய் உன் பனி முடிக்க.

title is ur choice:-)

காதலால் வாடினேன் ,
காத்து இருந்தே சாகிறேன்
ஏன் இதயத்தோடு கலந்தது போதாதென்று
ஏன் என் மூச்சோடும் கலக்கிறாய் ?
நான் சுவாசிக்கவும் கூடாது என்றா !

title is ur choice:-)

இது கனவு காணும் நேரம் அல்ல
உறங்கிடதே  மெத்தையில்.
இது சிறிது பேசும் நேரம் அல்ல
நண்பர்களோடு கூட்டத்தில் .
இது விளையாடும் நேரம் அல்ல 
குழந்தையோடு குலாவி  கொண்டு 
எழுந்து போராடும் நேரமடா
எமனோடு நீ நின்று ..

அன்பானவரோடு ஆசையில் பழகு
கோவத்தில் வந்தால் ரௌத்திரம் பழகு ..
உன் லீலைகள் எதுவானாலும் நீ
நேர் வழியில் செல்.
உன் வாய் மொழி எது ஆனாலும் உன்
வாய்மையால் வெல்.

தோற்பவர் எவர் ஆனாலும் நீ
தோழமையுடன் செல்.
தோற்க்கமாட்டாய்  நீ எபோதும்
துணிவுடன் நில்,

எங்கள் அன்பில் நீ இருக்க என்னடா பயம்  ,
எதிரியை உன் புன்னகையால் தூக்கிபோடு என்றும் உனக்கே   ஜெயம்.

title is ur choice:-)

அசைந்து ஆடும் காற்றே
ஏன் மீது மோதியது ஏனோ!
தேகம் தொட்ட மழை துளியே ,
நீ தவறி சிந்தியது ஏனோ?

ஏன் கண்ணன் பார்த்த பார்வையில்
நீயும் கலந்கிவிட்டை தானோ

சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை
ஏன் உணர்வை வெளிபடுத்த மொழியும் இல்லை
செல்லும் பாதையும் விளங்கவில்லை

கண்மூடி நடக்கேன்றேனடா,
உன் பாத சுவடுகளை தடவி ..

title is ur choice:-)

மற்றவர் யோசனையை நாம் கேட்டு வாழவேண்டுமென்றால்
நம்முடைய யோசனைகள் யாருக்கு ...
அவர்களின் சிந்தனையில் நாம் வாழ்ந்தால்
நமக்கென்று ஒரு உடல் எதற்கு ...

சுயமாக சிந்தி ,
மற்றவரின் கருத்தை பகிர்ந்து கொள்
ஆனால்
உன் மனதின் பாதையில் செல்

உன் வாழ்கையை  வாழ்
ஏனெனில் இது தான் உன் முழுமையான  வாழ்கை.

title is ur choice:-)

மண் மீது மழை கொண்ட பாசம்
கடல் அலை கொண்ட நேசம் ..
ஊடலோடு திரும்பி சென்ற காதலன்
பின கூடலோடு மாறிவிடுவர் - இருவரும்
காரணம் சொல்ல தெரியாமல்
உருகினால் ராதையும் கண்ணனை பார்த்து நகைத்து .

title is ur choice:-)

பேச நினைத்தால் வார்த்தை வாராது
என் நினைவு அலைகளும் தீராது ,
பார்வைகள் ஒன்றும் குறையாது
அந்த நிமிடம் போவதும் தெரியாது ..
என் இமைகள் திறக்கவைத்ததும் நீ
என் இதழ்கள் பேசவைத்ததும் நீ
என் மனது நினைக்கவைத்ததும் நீ
நான் பாட காரணமும் நீ

என் மௌனம் உனக்கு புரியாதா
என் மனதை தொலைத்து விட்டேன் அதுகூட உனக்கு தெரியாதா
சுவற்றில் அடிக்க பயன்படுத்துவார்கள் ஆணி
என் மனதை ஒடித்துவிட்டை போ நீ
புரியவில்லையா நீ ஒரு மக்கு
என்னை மறுப்பதற்கு இது தான் கிடைத்ததா உனக்கு ஒரு சாக்கு ...

title is ur choice:-)

கவிதையே பாட வா, இல்லை
நான் உன்னை பாடவா !
காதலே ஆள வா,  இல்லை
நான் உன்னை ஆளவா !
தென்றலே சேர வா , இல்லை
நான் உன்னில் சேரவா ! 

title is ur choice:-)

எதை எழுத நினைத்தாலும் முடியவில்லை
என் எண்ணங்களும் ஒன்று சேரவில்லை
மரணம் கூட நெருங்க வில்லை ....
நானே இன்று எனது இல்லை.

title is ur choice:-)

என் இதயம் திறந்த நேரம்
என் மனது பறந்தது தொலை தூரம்
நினைத்தேன் நெருங்கிவிட்டேன் வானம்
நடுவில் வந்ததடா பாழ் மேகம்..
தேடினேன் தேடினேன் உன்னை நானும் ..
மேகம் அடித்து சென்றது சேர்த்து என்னை ...

title is ur choice:-)

உன் அருகில் வந்து நின்றேன் ..
உன் கண்களில் என்னை கண்டேன் ..
உன் இதழ்கள் திறக்கவில்லை ஏனோ ?
என்னை உனக்கு பிடிக்க வில்லை தானோ?..

u plz can give title :-)

மரம் அசைந்தால் வரும் காற்று 
மழை பெய்தால் வரும் வரும் சாரல்
என் இதயம் திறந்தால் வரும்  உன் நினைவு
சுவாசிக்கும் ஒவ்வொரு நிமிடமும்
உணர்ந்து கொண்டு இருக்கிறேன்   உன் பிரிவு.
கண்கள் தேடியது உன்னை
கவிதைகள் பாடுதடா பெண்மை
அழகு சேர்த்திடுமே கண்மை
நான் சொல்வதெல்லாம் உண்மை

வழித்தடம்

சிந்திக்க தெரிந்த ஒருவனுக்கு
வாழ்கையில் தோல்வி இல்லை..
சிரிக்க தெரிந்த ஒருவனுக்கு
வாழ்க்கையில் விழிச்சி இல்லை ..
இரண்டுமே தெரிந்தால் உனக்கு
வெற்றி தான் எல்லை .
கற்றுக்கொடுக்க இது பாடம் இல்லை
வாழ்கை நமக்கு தரும் "வழித்தடம்"
விட்டு விலகு உலகை அல்ல
விழிகளின் ஓரம் தேங்கி இருக்கும் கண்ணீரை