பேச நினைத்தால் வார்த்தை வாராது
என் நினைவு அலைகளும் தீராது ,
பார்வைகள் ஒன்றும் குறையாது
அந்த நிமிடம் போவதும் தெரியாது ..
என் இமைகள் திறக்கவைத்ததும் நீ
என் இதழ்கள் பேசவைத்ததும் நீ
என் மனது நினைக்கவைத்ததும் நீ
நான் பாட காரணமும் நீ
என் மௌனம் உனக்கு புரியாதா
என் மனதை தொலைத்து விட்டேன் அதுகூட உனக்கு தெரியாதா
சுவற்றில் அடிக்க பயன்படுத்துவார்கள் ஆணி
என் மனதை ஒடித்துவிட்டை போ நீ
புரியவில்லையா நீ ஒரு மக்கு
என்னை மறுப்பதற்கு இது தான் கிடைத்ததா உனக்கு ஒரு சாக்கு ...
No comments:
Post a Comment